அரசியல் ஆசை இருக்கா? நிருபர் கேட்ட கேள்விக்கு அஜீத் சொன்ன சூப்பர் பதில்!

by sankaran v |
ajith
X

ajith

அஜீத் தமிழ்சினிமா உலகில் எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தார். சினிமாவில் மட்டும் இல்லாமல் பைக், கார் ரேஸிலும் கலந்து கொண்டு சாதித்தார். அஜீத் தனது ரசிகர் மன்றத்தையேக் கலைத்து விட்டவர். முதல்ல குடும்பம், குழந்தை குட்டிகளைக் கவனிங்கன்னு சொன்னார். தனக்கு தல, அல்டிமேட், கடவுளே அஜீத்தே என எந்தப் பட்டமும் தேவையில்லை என தனது அனைத்து பட்டங்களையும் முதலில் துறந்தவர்.

அவரது நண்பர் விஜய் அரசியலில் இறங்கியதும் அவருக்கு அஜீத் ஆதரவு கொடுப்பாரா என்றெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே நேரம் அஜீத் மௌனமாக இருந்து விட்டார். அரசியல் நிலைப்பாட்டில் அஜீத் எப்படி என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ajith

ajith

அரசியல்ல அஜீத்துக்கு ஆர்வம் இல்லன்னாலும் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல ஜோதிடர்கள் அஜீத் நிச்சயமா அரசியலுக்கு வருவாருன்னுதான் அடிச்சிச் சொல்றாங்க. ஒரு நிருபர் அரசியல்ல உங்களுக்கு ஆர்வம் இருக்குதான்னு கேட்டாரு. அதற்கு அரசியல்ல எனக்கு நாட்டம் இல்லன்னு யார் சொன்னதுன்னு அந்த நிருபரிடம் எதிர்கேள்வி கேட்டார்.

இப்ப மட்டும் இல்ல. எப்பவும் அரசியல் என்னை சுத்தி இருந்துக்கிட்டே தான் இருக்கும். சினிமா இன்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான். கருணையே இல்லாத இந்த இன்டஸ்ட்ரில ஒருத்தன் சர்வே பண்ணனும்னா நிச்சயமாக அவனுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். எந்தக் காட்ஃபாதரும் இல்லாம இந்த சினிமா உலகிலே நீடிக்கவும், சாதிக்கவும் நான் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்துல இல்லை. அரசியல் இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்துல இல்லை. அப்படி இருக்கும்போது அஜீத் மட்டும் அரசியல்ல இல்லாம இருந்துவிட முடியுமா என்று அந்த நிருபரைப் பார்த்து எதிர்கேள்வி கேட்டார் அஜீத்.

Next Story