Connect with us
ajith

Cinema News

அஜித் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான தகவல்

Ajith Foundation: தமிழ் சினிமாவில் அஜித் எப்பேற்பட்ட ஒரு நடிகராக வலம் வருகிறார் என அனைவருக்கும் தெரியும். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்தவர் அஜித். ஆனால் பள்ளிப்பருவத்தில் எஸ்.பி.பியின் மகனான சரணின் தோழனாக இருந்திருக்கிறார் அஜித்.

அதனால் எஸ்.பி.பியின் மூலமாக தெலுங்கில்  முதன் முதலில் தன் சினிமா அறிமுகத்தை பதிவு செய்தார் அஜித். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த தெலுங்கு படத்தின் இயக்குனர் ஒரு விபத்தில் இறந்து போக அந்தப் படம் அப்படியே நின்று போனது.

இதையும் படிங்க: கன்ஃபார்மா 10 படம்தான்! லோகேஷ் முடிவுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் – இந்தளவு வேதனையா?

அதன் பிறகே தமிழ் சினிமாவிற்குள் வந்தார். இப்படி படிப்படியாக தன்னுடைய சொந்த உழைப்பாலும் கடின முயற்சியாலும் இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் கொண்டாடக்கூடிய நடிகராக காணப்படுகிறார் அஜித்.

ஆனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இவரை சுற்றி பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல கோடி சம்பளம் வாங்கும் அஜித் எந்தவொரு ப்ரோமோஷனுக்கும் வருவதில்லை. ரசிகர்களை சந்திப்பதும் இல்லை. யாருக்கும் உதவி செய்த மாதிரியும் இல்லை என ஏகப்பட்ட சர்ச்சைகள் அவர் மீது பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படிங்க: அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..

ஆனால் சத்தமே இல்லாமல் தன் தாய் தந்தை பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி முதியோர்களுக்காக உதவி செய்து கொண்டு வருகிறாராம் அஜித். மோனிகா – மணி ஃபவுண்டேஷன் என்ற பெயர் கொண்ட அந்த அறக்கட்டளையை பற்றி யாருக்கும் இதுவரைக்கும் தெரியாதாம்.

காரணம் இந்த மாதிரி உதவி செய்வதை வெளியில் சொல்லவேண்டாம் என்றும் அஜித் சொல்லியிருக்கிறாராம். அதே போல் ஜெய்சங்கரின் மகனான விஜய்சங்கர் சென்னையில் ஒரு பிரபல கண் மருத்துவமனையை நடத்திக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா உடனே ஜூமிங்தான்!.. தாவாணி பாவாடையில் அழகை காட்டும் ஷிவானி

அவர் மூலமாகவும் அஜித் ஏராளமானோருக்கு பல உதவிகளை செய்து வருகிறாராம்.  மேலும் விஜய் சங்கரிடமும் இந்த மாதிரி நான் உதவிகள் செய்து வருகிறேன் என யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம் அஜித்.

உதவிகளே செய்யாமல் செய்த மாதிரி பப்ளிசிட்டி பண்ணும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஏராளமான உதவிகளை செய்து பப்ளிசிட்டியே வேண்டாம் என சொல்லும் அஜித்தின் பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top