என்னடா இன்னும் காணலயேனு பாத்தேன்! சத்யதேவ் இஸ் கம்பேக்.. வைரலாகும் அஜித்தின் நியூ லுக்
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு ஹேண்ட்ஸம் ஹீரோ, மாஸ் ஹீரோ, சார்மிங் ஹீரோ என அனைத்துக்கும் சொந்தக்காரராக திகழ்பவர் நடிகர் அஜித். சமீபகாலமாக அஜித்தின் விதவிதமான புகைப்படங்களை இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
விளம்பரம் விரும்பாதவர் அஜித் என பல பேர் சொல்லி வரும் நிலையில் அதற்கு டபுள் மடங்காக ஒரு விளம்பர மாடலாகவே மாறியிருக்கிறார் அஜித். விதவிதமாக காஸ்ட்யூமில் அவரின் லுக் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
இதையும் படிங்க: ச்ச மிஸ் பண்ணிட்டீங்களே ஜீ.. ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் அசோக்செல்வன் கேரக்டரில் நடிக்க இருந்த நடிகர்..
அதுவும் ஒவ்வொரு நாளும் அவர் அணியும் ஆடைகளுக்காகவே ரசிகர்கள் பொழுது விடிந்தால் இணையம் முன்னாடி உட்கார்ந்துவிடுகின்றனர். அஜித் புகைப்படம் எப்படியும் வரும் என. அந்தளவுக்கு அஜித்தின் புகைப்படங்கள் தினந்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்றும் அஜர்பைஜானில் இருந்து அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் நடித்த சத்யதேவ் கெட்டப்பில் மாஸாக இருக்கிறார் அஜித்.
இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?
மேலும் அதை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில நடிகர் என்றும் விமர்சித்து வருகிறார்கள். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெற இருக்கிறது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால் அஜர்பைஜானில் நடந்து முடிந்துவிட்டதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறும் என்பதையும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கிறோம் என லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா?!..