அம்மா நீங்க எனக்கு செஞ்சத மறக்கவே மாட்டேன்!.. விஜய் அம்மாவுக்கு நன்றி சொன்ன அஜித்!...

by சிவா |   ( Updated:2024-06-21 21:06:44  )
ajith
X

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் வளர்ந்தவர்கள்தான் விஜய் - அஜித். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்கள். அஜித் சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்களை உருவாக்கினார். விஜயோ நடனமாடியோ ரசிகர்களை உருவாக்கினார்.

ஒருகட்டத்தில் இருவருமே ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறினார்கள். எம்.ஜி.ஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமல் போல, விஜய்க்கு போட்டி நடிகராக அஜித் மாறினார். அதேநேரம், வளரும் நேரத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்க்கு நண்பனாக அஜித் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்தின் காதலுக்கு விஜய் உதவுவது போல காட்சிகள் வரும்.

இதையும் படிங்க:விஜயால் அந்த ஒரு பெருமைக்கு ஆளான சூப்பர் குட் பிலிம்ஸ்! எல்லாம் அந்த பாடல் செய்த மேஜிக்

அதன்பின் வஸந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் இரண்டாவதாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர். ஆனால், 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படத்திலிருந்து அஜித் விலகினார். அவருக்கு பதில் அந்த படத்தில் அறிமுகமானவர்தான் சூர்யா.

அதன்பின் பல வருடங்களாகியும் அஜித், விஜய் இணைந்து நடிக்கவில்லை. அதோடு, போட்டி நடிகர்கள் ஒரு கட்டத்தில் எதிரி நடிகர்களாகவும் மாறினார்கள். விஜய் என்ன செய்கிறார், எந்த இயக்குனர் படத்தில் நடிக்கிறார் என அஜித் கவனித்துக்கொண்டே இருப்பார். விஜயும் அதையே செய்வார்.

rajavin

விஜயை பற்றி ஒரு செய்தி வெளியாகி பரபரப்பானால், அஜித் உடனே தனது புகைப்படம் ஒன்றை லீக் செய்வார். அல்லது அவரின் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இதையேதான் விஜயும் செய்வார். ஆனால், இருவருக்குள்ளும் நல்ல நட்பும், மரியாதையும் உண்டு என சிலர் சொல்வதுண்டு.

இந்நிலையில், அஜித் கலந்து கொண்ட ஒரு விழாவில் விஜயின் அம்மா ஷோபாவும், எஸ்.ஏ.சியும் கலந்து கொண்டனர். அந்த மேடையில் பேசிய அஜித் ஷோபாவை பார்த்து ‘அம்மா ராஜாவின் பார்வையிலே ஷூட்டிங்கில் நீங்கள் எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வருவீர்கள். அந்த அன்பை மறக்க மாட்டேன். உங்களுக்கு நன்றி’ என நெகிழ்ந்து போய் பேசினார்.

Next Story