இதுதான் கொழுந்தியா குசும்போ.?! மாட்டிக்கொண்டு முழிக்கும் அஜித்.! இதுதான் நடந்ததாம்.!
திரையுலகில் பல காதல் ஜோடிகள் இருந்தாலும், தற்போதைய இளைஞர்களுக்கும், பல திரைபிரபலங்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பது அஜித் மற்றும் ஷாலினி. இந்த காதல் ஜோடி தாங்கள் இருவரும் திரைப்படங்களில் நடிக்கும்போது காதல் வயப்பட்டு அதன் பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அதற்கு பிறகு தற்போது வரை நல்ல காதல் தம்பதிகளாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நேற்று இணையதளத்தில் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வந்தது. அதில் அஜீத்தும் ஷாலினியும் கட்டிப்பிடித்து இருப்பது போல இருந்தது.
அது இவர்கள் இருவரது காதலை குறிக்கும் வண்ணம் இருந்தாலும், சிலர் இது அவர்கள் குடும்ப புகைப்படம், அதனை வெளியுலகத்தில் பரப்புவது நல்லதல்ல. என்று இதனை ஷேர் செய்ய வேண்டாம் என்று பல அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இதையும் படியுங்களேன் - இந்த மூஞ்ச நீங்க பாத்துதான் ஆகனும்.! சொன்னதை செய்து காட்டிய SAC.!
அதற்கு சிலர் பதிலும் அளித்தனர். அதாவது இந்த புகைப்படம் அஜித்தின் குடும்பத்தில் இருந்துதான் வெளியாகியுள்ளதாம். அதாவது அஜித்தின் மனைவி ஷாலினி அவர்களின் தங்கை ஷாமிலி தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார்.
இந்த புகைப்படம் யார் மூலமாகவே வெளியாகி உள்ளது என்று அஜித் ரசிகர்கள் நினைத்திருக்கையில், இது அஜித்தின் கொழுந்தியா ஷாமிலியின் மூலமாகவே வெளியாகியுள்ளது என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது.