“விட்டா போதும்டா சாமி”… தாடியால் நிம்மதி இழந்த அஜித்… அடப்பாவமே!!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
“நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக “துணிவு” திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இத்திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
துணிவு VS வாரிசு
அஜித்தின் “துணிவு” திரைப்படமும் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் ஒரே நாளில் மோத உள்ளன. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் இத்திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
அஜித்தின் மாஸ் கெட்டப்
அஜித் குமார் “துணிவு” திரைப்படத்திற்காக பல நாட்களாக தாடி வைத்து வந்தார். அஜித்தின் அந்த கெட்டப் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த நிலையில் நேற்று அஜித் தனது தாடியை மழித்தவாறு இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், அஜித்குமார் தாடி எடுத்ததை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பார்ட்டி வைத்த ஆர்யா
ஆர்யா “நான் கடவுள்” திரைப்படத்தில் நடித்தபோது கிட்டத்தட்ட 2 வருடங்கள் அந்த படத்திற்காக தாடியோடு அலைந்துகொண்டிருந்தார். “நான் கடவுள்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது ஆர்யா தனது நண்பர்களை அழைத்து ஒரு ஹோட்டலில் பார்ட்டி கொடுத்தாராம். மேலும் அந்த பார்ட்டியில் வைத்தே அவர் தனது தாடியை மழித்தாராம். அதாவது எப்போது இந்த தாடியை எடுப்போம் என்ற பெரும் அவஸ்தையில் இருந்தாராம் ஆர்யா.
தாடியை மழித்த அஜித்
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக “துணிவு” திரைப்படத்திற்காக அஜித் தாடியோடு அலைந்தாராம். இதனை தொடர்ந்து சமீபத்தில் “துணிவு” திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். அந்த பாடல் காட்சியோடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாம். படப்பிடிப்பு முடிவடைந்த சற்று நேரத்திலேயே அஜித் தாடியை மழித்துவிட்டாராம். இப்போது அஜித் பார்ப்பதற்கு 25 வயது குறைந்தவர் போல் இருக்கிறார் என அந்தணன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நவரச நாயகனின் மோக வலையில் சிக்காத ஒரே நடிகை இவங்கதானாம்!!… ஓப்பனாக போட்டுடைத்த சினிமா விமர்சகர்…
டிரிப்புக்கு கிளம்பும் அஜித்
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு ஒன்றரை ஆண்டுகள் அஜித் உலகம் முழுவதும் சுற்றப்போவதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது அஜித், 60 நாட்கள் உலகம் சுற்றப்போகிறாராம். இந்த குட்டி டிரிப்பை முடித்தபிறகுதான் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.