வாட் புரோ ஐயம் பேட்… குட்பேட் அக்லியில் விஜயை வச்சி செய்றாரா அஜீத்?!

vijay ajith
Good bad ugly: விஜய் சமீபத்தில் அரசியலில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். வாட் புரோ… வெரி ராங் புரோன்னு ஆளும் கட்சியை சாடினார். நாம் தமிழர் சீமானும் விஜயின் வாட் புரோ டயலாக்கைக் கமெண்ட் அடித்தாரு. அதே போல சரத்குமாரும் கூட கமெண்ட் பண்ணினார். அந்த டயலாக் இப்போது ட்ரெண்டிங்.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து அரசியல் கட்சித்தலைவர்களை அவர்களே இவர்களேன்னு அழைக்காமல் ப்ரோ என்று அழைப்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்தார். அந்த வகையில் இப்போது அஜீத் படத்திலும் அதே வாட் புரோ டயலாக் வருகிறதாம். அது தெறிக்க விடும் என்கிறார்கள். எந்த இடத்தில் வருதுன்னு பார்க்கலாமா…
குட் பேட் அக்லி படத்தைப் பார்க்கும்போது பல படங்களோட ரெஃபரன்ஸ் இருக்குது. டிரெய்லரைப் பார்க்கும்போதே நமக்கு அது தெரிந்து விட்டது. தீனா, வரலாறு, வில்லன், வீரம்னு பல படங்கள் வருவது நமக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல் எட்டுப்பட்டி ராசாவுல இருந்து ஒத்த ரூபா தாரேன் பாடலையும் போட்டு வில்லன் செமயாக ஆடுவாரு. அதுல போற போக்குல லைட்டா விஜயைத் தட்டுற மாதிரி ஒரு டயலாக் இருக்காம்.
'வாட் புரோ… ஐயம் பேடு'ன்னு அஜீத் டயலாக் பேசுறாராம். அதுதான் இன்டர்வெல் பிளாக். அப்போ ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்ப்ஸா இருக்கணும்னு அஜீத் அப்படி ஒரு டயலாக் சொல்றாராம். அது அஜீத் ரசிகர்களுக்கு வரும். விஜய் ரசிகர்களுக்கு என்ன வரும்னு படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
அஜீத்தைப் பார்க்கும்போது நமக்கு யோகிபாபு சொல்ற டயலாக்தான் நினைவுக்கு வருது. 'ஏகே வாராரு. வழி விடுறா' என்ற அந்த டயலாக்தான் நினைவுக்கு வருது.