Connect with us

Cinema News

அஜித், சூர்யா வேண்டாம்.. விஜய் சேதுபதி தான் வேணும்.. ஷங்கர் அதிரடி.! இந்தியன்-2வில் சம்பவம் இருக்கு.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு RRR எனும் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் ராம்சரணை  வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படம் அரசியல் கதை களம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவானது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் தற்போது தடைபட்டு நிற்கிறது.

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து, இந்தியன்-2 திரைப்படத்தை உருவாக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த படத்தில் வில்லனாக விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை மீண்டும் நடிக்க வைக்கலாம் என்று பேச்சு வார்த்தை தற்போது எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் இதற்கு முன்னர் கொடுத்த ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – ஹீரோயின் மூஞ்சி நல்லா அழகா இருக்கு.. ஆனா பேரு தெரியல.. மேடையில் உளறிய பீஸ்ட் முக்கிய நடிகர்…

அப்போது, ஷங்கரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் கதாநாயகன் யார் என்று அஜித், சூர்யா, மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. அதற்கு இயக்குனர் ஷங்கர் சற்றும் சிந்திக்காமல் சடாரென விஜய் சேதுபதி பெயரை குறிப்பிட்டு இருப்பர். ஒவ்வொரு படத்திலும் என்னை அவர் கவர்ந்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அப்போ கண்டிப்பா இந்தியன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் அது ஒரு சம்பவமாக இருக்கும் என்று சிலாகித்து வருகின்றனர். விரைவில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு இருக்கும் என சினிமா வட்டத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top