விஜய் கூடயா படம் பண்ணுற!.. வெங்கட்பிரபுவிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்…

by Akhilan |   ( Updated:2024-08-14 07:47:39  )
விஜய் கூடயா படம் பண்ணுற!.. வெங்கட்பிரபுவிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்…
X

விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே படம் இயக்கிய முக்கிய இயக்குனர் லிஸ்ட்டில் இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்து அஜித் சொன்ன தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

அஜித்தின் சினிமா கேரியரில் அவருடைய வெற்றி படங்களில் முக்கிய இடம் பிடித்தது மங்காத்தா. ஆண்டி ஹீரோ கேரக்டரில் அஜித்தின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதுபோல வெங்கட் பிரபுவின் இயக்கமும், திரைக்கதையும் படத்திற்கு வசூலை குவித்தது.

இதையும் படிங்க: அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!

இப்படத்தின் சூட்டிங் சமயத்தில் அஜித்தை நேரில் வந்து விஜய் சந்தித்து சென்றார். அப்போ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. தற்போது அதேபோன்று சூழ்நிலை நடந்து இருக்கிறது. விஜயை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் அஜித்திற்கு திடீர் உடல்நிலை பிரச்சினை ஏற்பட அவரை நலம் விசாரிக்க வெங்கட் பிரபு நேரில் சென்றாராம். அவர் கிளம்பும்போது அஜித்தை சந்திக்கும் போது எனக்கு கால் செய்ய வேண்டும் என விஜய் கறாராக கூறிதான் அனுப்பினாராம். அதுபோலவே அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு விஜய்க்கு கால் செய்து கொடுத்து இருக்கிறார்.

இருவரும் போனில் வெகு நேரம் பேசி சிரித்ததாகவும் வெங்கட் பிரபு தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கோட் திரைப்படம் குறித்து அஜித் கூறும்போது என்னுடைய மங்காத்தா திரைப்படத்தை விட இப்படம் ஆயிரம் மடங்கு பெரிதாக வர வேண்டும் என வாழ்த்தினாராம்.

இதையும் படிங்க: இந்தியன்2 கிரிஞ்ச் கூட்டம்… முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள் இவங்களா?

Next Story