அனிருத்திடம் அஜித் சொன்ன விஷயம்! அதான் விடாமுயற்சி ரிலீஸாக இவ்ளோ லேட்டா?
Vidamuyarchi Movie: விடாமுயற்சி படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் தினந்தோறும் கேள்விகளாகவே இருந்து வருகின்றன. ஏனெனில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களைக் கடந்து அந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது தான் முடிந்திருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் படமாக்க வேண்டி இருக்கிறது.
அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை எல்லாம் முடித்து படம் ரிலீசுக்கு தயாராகும். ஆனால் அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் நடந்த சில பல பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதற்கிடையில் அக்டோபர் 31ம் தேதியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் ,கவின் நடிக்கும் குருதி பிச்சைக்காரன் ஆகிய மூன்று படங்கள் ஒன்றாக வெளியாகின்றது.
இதையும் படிங்க: இவருக்கு இல்லப்பா எண்ட்! பொன்விழா ஆண்டில் டபுள் ட்ரீட் கொடுக்க தயாரான ரஜினி
இந்த நிலையில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனால் அது இந்த நான்கு படத்திற்குமே வசூல் ரீதியாக பெரும் நஷ்டத்தை தான் கொடுக்கும். அதனால் எப்பொழுது ரிலீஸ் செய்யலாம் என பட குழு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது .இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது என கூறி இருக்கிறார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் காலதாமதம் ஆவதற்கு காரணம் அனிருத் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஏனெனில் அனிருத்திடமிருந்து இன்னும் விடாமுயற்சி படத்திற்கான இசை வரவில்லை என்பது தான் இதற்கான காரணம் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம் அனிருத் வேட்டையன் திரைப்படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் பிஸியாக இருக்கிறாராம்.
இதையும் படிங்க: தனுஷ் நல்லவரு தா… ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல… இது உலக மகா நடிப்பா இருக்கே…!
இதை அறிந்த அஜித் அனிருத்திடம் ‘ஒன்னும் பிரச்சனை இல்லை. வேட்டையன் திரைப்படத்தின் ரெக்கார்டிங் முடித்துவிட்டு படம் ரிலீஸ் ஆன பிறகு கூட விடாமுயற்சி படத்தின் வேலைகளை ஆரம்பித்து விடு. நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று சொன்னதாக அந்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார். இது ஒரு வகையில் மகிழ் திருமேனிக்கு பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
ஏனெனில் அவசர அவசரமாக வேலைகளை முடிப்பதை விட பொறுமையாக வேலை பார்த்தால் இன்னும் படம் பெஸ்ட்டாக வரும் என்பது அவரின் கணிப்பு. அஜித் சொன்னதைப் போல வேட்டையன் திரைப்படத்தின் ரீ ரெக்கார்டிங் எல்லாம் முடிந்து வேட்டையன் திரைப்படமும் ரிலீஸ் ஆகி அதன் பிறகு தான் விடாமுயற்சி திரைப்படத்தின் இசையை ஆரம்பிப்பார் அனிருத் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்தைத்தான் ஃபாலோ செய்ய போகிறாரா விஜய்? தளபதி 69 போஸ்டரின் ரகசியம்
அதுவும் விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருப்பதனால் அந்தப் பாடலுக்கான இசையை கொடுத்த பிறகு காட்சியை படமாக்கி முடித்துவிட்டு அதன் பிறகு தான் ரீ ரெக்கார்டிங் வேலையை ஆரம்பிப்பார் அனிருத். அதனால் எப்படியும் படம் அடுத்த பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்று அந்த பத்திரிகையாளர் கூறுகிறார்.