Good bad ugly: குட் பேட் அக்லி படத்தைப் பார்த்து அசந்து போன அஜீத்… இயக்குனரிடம் சொன்னது இதுதான்!

good bad ugly
மார்க் அன்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் 3 கெட்டப்புகளில் நடிக்கும் குட் பேட் அக்லி வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
குட்பேட் அக்லி படம் 10ம் தேதி ரிலீஸ் ஆகுது. இன்னைக்கு இருந்து ப்ரீ புக்கிங் ஸ்டார்ட் ஆகுது. பெரிய எதிர்பார்ப்புல இருக்கு. ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலையில் வச்சிருக்கு. அஜீத்தை எப்படி எல்லாம் பார்க்கணும்னு நினைச்சாங்களோ அப்படியே ஆதிக் ரவிச்சந்திரனும் காட்டி இருக்காங்க.
முதல் நாள் பெரிய கலெக்ஷனை நிச்சயமாக சந்திக்கும். பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அஜீத்துக்கு பெரிய கலெக்ஷன் கிடைக்கும். படம் பார்த்த எல்லாருமே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க. அஜீத்தே டப்பிங் பண்ணும்போது ஆதிக்கைப் பாராட்டுறதா சொல்றாங்க.
அவரே அடுத்த படத்தைக் கொடுக்கலாம்னுதான் இருக்காரு. தனுஷ் படத்துக்குப் பிறகு அஜீத்துடன் சேர்ந்து ஆதிக் இன்னொரு படம் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அஜீத் முதல் நாள் தியேட்டர்ல போய் ரசிகர்களுடன் பார்க்க வாய்ப்பு இல்லை. அவருக்கு சினிமாவை விட ரேஸ்ல தான் அதிக ஆர்வம். தனுஷிடம் மே மாதம் அஜீத் வந்து கதை கேட்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் அஜீத்துடன் இணைந்து திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படத்தின் பட்ஜெட் 270 கோடி வரை சொல்லப்படுகிறது. முதல் நாளே படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். பிக் ஓபனிங் இருக்கும். வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.