More
Categories: Cinema News latest news

அந்த படத்துல நடிச்சதுதான் அஜித் எடுத்த கேவலமான முடிவு – ட்விட்டரில் காயத்ரி சரமாரி பதில்

நடிகர் அஜித்தை பற்றிய ஒரு ட்விட்டர் பதிவிற்கு விஜய் சேதுபதி பட நடிகை காயத்ரி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். காயத்ரி தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித்தை பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதற்கு காயத்திரி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் மேற்கொண்ட பார்வை.

Advertising
Advertising

இதையும் படிங்க : எப்பா இது ‘ஜெய்லர்’ படமே இல்லை! ஆசையா போன ரசிகர்களுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி

படம் வெளியாகி நான்கு வருடங்களை கடந்த நிலையில் அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று அஜீத் முடிவெடுத்தது தான் மிக கேவலமான ஒரு முடிவு என ஒரு ரசிகர் ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார். நேர்கொண்ட பார்வை முழுக்க முழுக்க ஏ சென்டர்களுக்கான படம்.

gayu1

விசுவாசம் எப்படி குடும்ப ஆடியன்ஸை தானாக இழுத்ததோ அதைவிட பல மடங்கு பின்னடைவை மேற்கொண்ட பார்வை படம் பெற்று தந்தது. மேலும் இந்த நேர்கொண்ட பார்வை படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் அவர் மீது திணிக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அது அவருக்கு சுத்தமாக செட் ஆகவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க : வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு.. அவர் மீதே பழி போடலாமா? நடிகையிடம் பாயும் பயில்வான் ரங்கநாதன்…

இதற்கு பதிலடி கொடுத்த காயத்ரி ஒரு படத்தின் வெற்றி பாக்ஸ் ஆபிஸ்சை மட்டும் சார்ந்தது இல்லை. சமூகத்தில் அது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். இந்தப் படம் எப்படிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் அது தொடரவும் செய்யும் என தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்

Published by
Rohini

Recent Posts