Connect with us
rajini

Cinema News

எப்பா இது ‘ஜெய்லர்’ படமே இல்லை! ஆசையா போன ரசிகர்களுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி

இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய படம் ஜெய்லர். அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெய்லர் திரைப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்திருப்பதாகவே தெரிகிறது. படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

நெல்சனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடுகிறார்கள். முந்தைய படத்திற்காக மொக்க வாங்கிய அதே மக்களிடம் இருந்து பெரும் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் நெல்சன். படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், விநாயக், யோகிபாபு இவர்களின் நடிப்பும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரின் ஒரே கருத்தாக கருதப்படுவது படத்தின் முதல் பாதி பட்டையை கிளப்பியிருக்கிறது என்றும் இரண்டாம் பாதி வழக்கமான பாணியிலும் க்ளைமாக்ஸ் பிச்சி உதறிட்டாங்க என்றும் கூறிவருகிறார்கள்.

ரொம்ப நாளைக்கு பிறகு ரஜினியை இப்படி பார்ப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் ட்விட்டரில் ஜெய்லர் படத்தை பற்றி ரிவியூவ்ஸ் போய்க் கொண்டிருக்க பெரும்பாலானோர் இது ஜெய்லர் படமே இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

ஏனெனில் படம் 10 பாட்ஷா, 10 படையப்பா, 15 சந்திரமுகி, 5 மூன்று முகம், 10 காலா, என எல்லாமும் பார்த்த ஒரு ரஜினியாகத்தான் தெரிந்தார் என்றும் ரஜினிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த படமாக ஜெய்லர் திரைப்படம் அமையும் என கூறிவருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் க்ளைமாக்ஸ் சீனுக்கு முன்னாடி ஒரு சீனில் கல் நெஞ்சம் கொண்ட யாரும் அழுதுவிடுவார்கள் என்றும் அந்த சீனில் ஆறிலிருந்து அறுபது வரை ரஜினி கொஞ்சம் எட்டிப்பார்ப்பார் என்றும் கூறினார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top