latest news
அஜித் , விஜய், சூர்யா, பிரசாந்த் என அனைவரும் மிஸ் பண்ண ஒரே படம்.. நல்ல வேளை நடிக்கல
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக அதே அந்தஸ்துடன் இருப்பவர்கள் விஜயும் அஜித்தும்தான். ஆனால் விஜய் அஜித்துக்கு முன்பே ஒரு டாப் நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவரை டாப் ஸ்டார் என்றும் அழைததனர். ஆனால் இடையில் பிரசாந்துக்கு சரிவர வாய்ப்பு வராததால் விஜயும் அஜித்தும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த நிலையில் ஒரே படத்தின் கதை விஜய், அஜித், பிரசாந்த் மற்றும் சூர்யாவுக்கும் போயிருக்கிறது. பிரபல ஆஸ்கார் பிலிம்ஸ் பாஸ்கரின் மகனான பாலாஜி விஜயை வைத்து விஷ்ணு படம் எடுத்தவர். அந்தப் படம் பெரிய ஹிட். அதனால் அடுத்த படத்தையும் விஜயை வைத்து பண்ண நினைக்க அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்சத்தை கொடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இதனால்தான் இந்தியன்2ல் நடிக்கவில்லை… விஜய் டிவி ரக்ஷன் பொடணியில் போட்ட ஆர்.ஜே.பாலாஜி!..
ஆனால் கால்ஷீட் காரணமாக விஜயால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது . இதோடு எஸ் .ஏ.சந்திரசேகரே பாலாஜியிடம் ‘இன்னொரு பையன் இருக்கான். அவர் பேரு அஜித். அவனிடம் போய் கேளுங்க’ என்ற ஐடியாவை கொடுத்திருக்கிறார். எஸ்.ஏ.சி சொன்னதை போல அஜித்தை போய் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்திற்கு அஜித் 10 லட்சம் கேட்டாராம்.
ஆனால் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமோ அவ்வளவு பெரிய தொகை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அஜித் ‘எனக்கு பணம் தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனால்தான் எனக்கு 10 லட்சம் வேண்டும்’ என கூறியிருக்கிறார். சரி 10 இல்லை. 5 லட்சம் தருகிறேன் என்று பாலாஜி கூறினாராம். ஆனால் அஜித் 10 லட்சத்திலிருந்து மாறவே இல்லையாம்.
இதனால் அஜித்தையும் தவறவிட்டா ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம்.அடுத்ததாக சூர்யாவை சந்தித்து பேசியிருக்கின்றனர். சூர்யா ஆடிசனுக்கும் வரவழைக்கப்பட்டார். ஆனால் ஆடிசனில் சரியாக நடிக்கவில்லையாம். அதனால் சூர்யாவும் மிஸ்ஸானார். கடைசியாக பிரசாந்துக்கு கதை சொல்லி அவருக்கு 10 லட்சம் சம்பளமும் பேசி ஓகே பண்ணியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்!.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா?!….
படத்தின் பூஜை போட அதற்கு பிரசாந்த் வரவில்லையாம். அந்த நேரத்தில்தான் ஜீன்ஸ் படத்திற்காக பிரசாந்த் கமிட் ஆக அவராலும் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஜார்ஜ் மற்றும் பூஜா குமாரை வைத்து அந்தப் படத்தை எடுத்திருக்கிறார் பாலாஜி. அந்தப் படம் காதல் ரோஜாவே. 2000 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் அந்தளவுக்கு வெற்றியடையவில்லை என்பதுதான் உண்மை.