அஜித்தை பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்க.!. சர்ச்சைக்கு உள்ளான போஸ்டர்….

Published on: March 29, 2022
---Advertisement---

தமிழ் படங்களில் அதிகமாக புகை பிடிக்கும் , மது அறுந்தும் காட்சிகளில் நடித்து சிக்கலில் அதிகமாக மாட்டிக்கொண்டவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். உண்மையில் ஸ்டைலாக சிகெரெட் பிடித்து பெரும்பாலானவர்கள் அந்த ஸ்டைலால் ஈர்க்கப்பட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இதனை கொஞ்சம் லேட்டாக புரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படையப்பா, பாபா படங்களை அடுத்து சந்திரமுகி படத்திலிருந்து புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்த்துவிட்டார். அதன் பிறகு அஜித் மங்காத்தா படத்திற்கு பிறகு, ஆரம்பம் படத்திலிருந்து புதை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க முற்றிலும் மறுத்துவிட்டார்.

ஆனால்,  மற்ற நடிகர்கள் இன்னும் அதனை தொடர்ந்து தான் வருகின்றனர். அஜித்தின் சக போட்டியாளராக இருக்கும் விஜய் கூட சர்கார் படம் முழுக்க சிகெரெட் பிடித்துக்கொண்டு தான் இருந்தார். மாஸ்டர் படத்தில் குடிப்பழக்கம் உள்ள நபராக இருக்கிறார். மேலும் போஸ்டர்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி ஸ்டில் கொடுத்து வருகிறார், சமீபத்தில் வெளியான பீஸ்ட் போஸ்டர் கூட கோடரிஉடன் இருக்கிறார்.

இதற்கடுத்து தனுஷ், பெரும்பாலும் எல்லா படத்திலும் தனுஷ் சிகெரெட் பிடிப்பது, அதில் ரஜினி ஸ்டைலை அப்படியே பின்பற்றுவது என வலம் வருகிறார்.

 

சமீபத்தில் வெளியான நானே வருவேன் பட போஸ்டர்களில் கூட தனுஷ் சிகிரெட் பிடித்தது போல தான் வெளியாகி வருகிறது. அவர் பாலோ செய்யும் ரஜினி கூட அதனை விட்டுவிட்டார்.

இதையும் படியுங்களேன் – அஜித் போட்டோவ ஏண்டா பெருசா போடல.?! வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்த சினிமா பிரபலம்.!

naane varuven

பெரும்பாலான இளம் ரசிகர்கள் தங்கள் ஆதர்சன நாயகர்களை அப்படியே பாலோ செய்து வருகின்றானர். அவர்கள் போல உடை அணிவது, மேனரிசம் செய்வது என பின்பற்றுகின்றனர். அது போலவே அவர்கள் புகைப்பிடிப்பதையும் கற்றுக்கொண்டால் சமுதாயம் சீர்கேடு ஆகிவிடும் என பல சமூக ஆரவாளர்கள் இதனை ஓர் புகாராகவே தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment