நண்பேண்டா!.. லண்டனில் அஜித் – விஜய் செம ஃபிரண்ட்ஷிப்!.. Un Seen வீடியோ!…
விஜய் – அஜித் நட்பு வீடியோ

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் போட்டி நடிகர்களாக வலம் வந்தவர்கள் விஜய், அஜித். இருவருமே காதல் படங்களில் நடிக்க துவங்கி, ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோக்களாக மாறி அப்படியே மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். அஜித் – விஜய் மோதல் அதிகமாகி அஜித் தனது படங்களில் விஜயை மறைமுகமாக திட்டி பாடல் வரிகளை வைப்பதும், விஜய் தனது படத்தில் அஜித்தை மறைமுகமாக திட்டி வசனம் பேசியதும் நடந்தது.
ஆனால் காலம் அவர்களுக்கு கொடுத்த பக்குவம் காரணமாக அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டனர். ஆனாலும் விஜய், அஜித் ரசிகர்கள் மாறவில்லை. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து சண்டை போட்டுக் கொண்டனர். ஆனால், தற்போது அது குறைந்துவிட்டது.

அஜித்தின் தந்தை மற்றும் தாய் மரணமடைந்த போது விஜய் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் சொன்னார். அதேபோல, விஜய் முதலமைச்சரான் போது அஜித் அவருக்கு வாழ்த்து சொன்னார். மேலும் சமீபத்தில் லண்டன் சென்ற் விஜய் அங்கு அஜித்தின் டீம் கலந்த கொண்ட கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து துவங்கி வைத்தார். அது தொடர்பாக பல வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், லண்டனில் விஜய் அஜித்தை சந்திதது முதல், ஒரு ரேஸ் காரை விஜய் ஓட்டி பார்த்தது வரை எல்லா காட்சிகளும் அடங்கிய ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது விஜய்க்கும், அஜித்துக்கும் இடையே உள்ள நட்பு பலரையும் நெகிழ செய்கிறது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற பிரண்ட்ஷிப் பாடலை அந்த வீடியோவில் சேர்த்து அசத்தியிருக்கிறார்கள். இந்த வீடியோ விஜய், அஜித் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.












