இரண்டு மெகா ஹிட் படங்களை தவறவிட்ட விஜய், அஜித்....தட்டி தூக்கிய விக்ரம்....
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். இருவரும் சொல்லமுடியாத உயரத்தை அடைந்து விட்டார்கள். விஜய், அஜித்தின் படங்களை தான் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். விஜய் வாரிசு என்ற படத்திலும் அஜித் எச்.வினோத் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்கள்.
சமீபகாலமாக தான் விஜய், அஜித் இருவரும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகின்றனர். ஆரம்பகாலங்களில் இவர்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்ப பின்னனியை மையமாக வைத்த படங்களாகவே இருந்தன. அந்த படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தது.
இதையும் படிங்கள் : இன்னொரு ‘கோப்ரா’ ஆகுமா ‘வெந்து தணிந்தது காடு’…ஃபிளாப் பாத்தும் திருந்தலையா கவுதம் மேனன்?!…
அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய்க்காக பூவே உனக்காக படமும் அஜித்துக்காக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படங்களின் வெற்றியை அடுத்து விஜய்க்கு இன்னொரு படமும் விக்ரமன் இயக்கத்தில் அமைந்திருக்கிறது.
ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க விருப்பமின்மையால் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அது தான் சூர்யா நடிப்பில் வெற்றி நடை போட்ட உன்னை நினைத்து படம். மேலும் அஜித்திற்கு புதிய மன்னர்கள் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகு நடிகர் விக்ரமை நடிக்க வைத்திருக்கிறார் விக்ரமன்.