இதுவரை பொங்கலுக்கு மோதிய அஜித்-விஜய் திரைப்படங்கள்… ரேஸ்ல ஜெயிச்சது தலயா? தளபதியா?...

Ajith and Vijay
கோலிவுட்டில் ரஜினி, கமல் ஆகியோருக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட மாஸ் நடிகர்களாக அஜித், விஜய் ஆகியோர் திகழ்கிறார்கள். இருவரும் தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர்கள் என்றாலும் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானால் அவரது ரசிகர்களிடையே கடும் சச்சரவு நிகழும். சில நேரங்களில் அடிதடியில் கூட முடியும்.

Ajith and Vijay
இந்த நிலையில் வருகிற பொங்கலுக்கு அஜித், விஜய் ஆகியோர் நடித்த “வாரிசு”, “துணிவு” ஆகிய திரைப்படங்கள் மோத உள்ளன. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் மோத உள்ளதால் ரசிகர்கள் இத்திரைப்படங்களுக்கு வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இதற்கு முன் பொங்கல் தினங்களில் மோதிய அஜித்-விஜய் திரைப்படங்களை குறித்து பார்க்கலாம்.
1.கோயமுத்தூர் மாப்பிள்ளை-வான்மதி

Coimbatore Mappillai and Vanmathi
1996 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று கோயமுத்தூர் மாப்பிள்ளை-வான்மதி ஆகிய திரைப்படங்கள் மோதின. விஜய், அஜித் ஆகிய இருவரும் முன்னணி நடிகர்களாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த இத்திரைப்படங்கள் இரண்டுமே வெற்றி பெற்ற திரைப்படங்களாக அமைந்தன.
2. ஃப்ரண்ட்ஸ்-தீனா

Friend and Dheena
2001 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ஃப்ரண்ட்ஸ்-தீனா ஆகிய திரைப்படங்கள் மோதின. இந்த இரண்டு திரைப்படங்களும் விஜய், அஜித் ஆகியோரின் கேரியரிலேயே திருப்புமுனையை ஏற்படுத்திய முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தன. குறிப்பாக “தீனா” திரைப்படத்தில் இருந்துதான் அஜித்தை ‘தல’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
3. ஆதி-பரமசிவன்

Aathi and Paramasivan
2006 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ஆதி-பரமசிவன் ஆகிய திரைப்படங்கள் மோதின. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே வந்தன.
4. போக்கிரி-ஆழ்வார்

Pokkiri and Aalwar
2007 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று போக்கிரி-ஆழ்வார் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் விஜய் நடித்த “போக்கிரி” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ஆனால் அஜித் நடித்த “ஆழ்வார்” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை.
5. ஜில்லா-வீரம்

Jilla and Veeram
2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜில்லா-வீரம் ஆகிய திரைப்படங்கள் மோதின. இந்த இரண்டு திரைப்படங்களுமே குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன.
இந்த நிலையில்தான் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “வாரிசு”, “துணிவு” திரைப்படங்கள் மோதுகின்றன. இந்த பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது தலயா? தளபதியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.