அஜித் மாறுவேடத்தில் போய் பார்த்த படம்.. விழுந்து விழுந்து சிரிச்ச தல! என்ன படம் தெரியுமா?

Published on: January 26, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: நடிகர் அஜித்தை பொறுத்தவரைக்கும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என திரையுலகில் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. விஜயை எடுத்துக் கொண்டால் சாந்தனு, சீரியல் நடிகர் சஞ்சீவ், நடிகர் ஸ்ரீமான் போன்ற நடிகர்கள் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆனால் அஜித்துக்கு அப்படி யாரும் இருந்த மாதிரி தெரியவில்லை.

ஆனால் படங்களில் நடிக்கும் போது அஜித் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்கள், டெக்னீசியன்களிடம் நீண்ட வருடங்கள் பழகிய ஒரு உணர்வை ஏற்படுத்திவிடுவார். அந்தளவுக்கு அனைவரிடமும் எளிதாக ஜெல் ஆக கூடிய மனிதர்தான் அஜித். அப்படி இயக்குனர் சரணுக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு பாண்டிங் எப்போதுமே இருந்து வருகின்றன.

இதையும் படிங்க: இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அசல் போன்ற படங்களை இயக்கியவர்தான் அஜித். இதிலிருந்தே அஜித்துக்கும் சரணுக்கும் இடையே மிகப்பெரிய நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. படப்பிடிப்பு நேரத்தில் அஜித்துடன் பழகிய நாள்களை சமீபத்திய பேட்டிகளின் மூலம் சரண் பகிர்ந்திருந்தார்.

அதாவது அசல் படத்தில் அமைந்த பாடல்களை எல்லாம் விஜய்க்கு போட்டு காண்பித்தாராம் அஜித். வெளியில் ரசிகர்கள் சொல்வதை போல் விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே எந்தவொரு விரோதமும் போட்டியும் இல்லை. அவர்களுக்குள் ஒரு இணக்கமான நட்பு இருந்து வருகிறது என சரண் கூறினார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!..

அதே போல் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ என்ற படத்தை சரணும் அஜித்தும் திரையரங்கிற்கு சென்று பார்த்தார்களாம். அஜித்தை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக மாறு வேடத்தில் வந்து பார்த்தாராம். படத்தை பார்த்து படம் முடியும் வரை அஜித் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தாராம். அதன் பின் படம் முடியும் ஒரு 5 நிமிடத்திற்கு முன்பே அஜித் கிளம்பி விட்டாராம்.