லண்டன் பறந்த அஜித்.! மீண்டும் வலிமையை ஞாபகபடுத்திய H.வினோத்.! பதற்றத்தில் ரசிகர்கள்...

by Manikandan |
லண்டன் பறந்த அஜித்.! மீண்டும் வலிமையை ஞாபகபடுத்திய H.வினோத்.! பதற்றத்தில் ரசிகர்கள்...
X

நடிகர் அஜித்குமார் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை H.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

இந்த படம் தான் அஜித்திற்கு வினோத் கூறிய முதல் கதை என கூறப்படுகிறது. அதனால் எந்த வித சமரசமும் இல்லாமல் இப்படத்தை வினோத் இயக்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இப்பட ஷூட்டிங் விறுவிறுவென நடைபெறும் வேளையில் , அஜித் தனது விடுமுறையை கழிக்க லண்டன் பறந்து விட்டாராம். அதனால், வினோத் தற்போது அஜித் இல்லாத காட்சிகளை இயக்கி வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் - கடைசி வர சிம்பு பெயரை சொல்லவே இல்லையே.! ‘அந்த’ நடிகை மீது வருத்தத்தில் ரசிகர்கள்.!

அதுவும் எங்கே என்றால் புனேவில் தான் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். இதற்கு முன்னர் வலிமை படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் பெரும்பாலும் அங்கு தான் எடுக்கப்பட்டதாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மீண்டும் அதே வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டா என சற்று ஜெர்க் ஆகியுள்ளனர்.

Next Story