கேப்டனுக்கு பிறகு அஜித்தை கொண்டாடப்போகும் மதுரை மக்கள் - என்ன விஷயம் தெரியுமா?
நடிகர் அஜித் இந்த மாத இறுதியில் மதுரைக்கு வரப்போவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரராக பல நடிகர்கள் இருந்து வந்தாலும் இன்று வரை தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்தை ஒரு குட்டி எம்ஜிஆர் என்றே அழைத்து வந்தார்கள்.
சினிமாவிற்குள் நடிகர்களுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்து வந்தாலும் ஒவ்வொரு நடிகரின் பழக்க வழக்கங்கள் இன்னொரு நடிகரிடம் பார்க்கும்போது கொஞ்சம் வியப்பாகவே இருக்கும். அதில் நடிகர் விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அது என்ன என்பதை விளக்கமாக கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
இதையும் படிங்க : கங்குவா வீடியோவில் ரம்மி விளம்பரம்!.. சூர்யா அலார்ட்டா இல்லனா மறுபடியும் உயிர் போயிடும்!..
அதாவது விஜயகாந்த் அரசியலில் குதிப்பதற்காக நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இது அரசியலுக்காக அவர் செய்த ஒரு தியாகம். ஆனால் எங்கே நம்மை அரசியலில் இழுத்து விடுவார்களோ என்பதற்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தார் அஜித். அந்த அளவுக்கு அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் தான் ரசிகர்கள் மூலமாகவே அரசியலுக்கு வந்து விடுவோமோ என்ற ஒரு பயத்தில் ரசிகர் மன்றத்தை கலைத்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
மேலும் திருமணத்திற்கு முன்பு வரை அஜித் பல கிசுகிசுக்களுக்கு ஆளானார். ஒரு சமயம் ஒரு நடிகையின் மீது காதல் கொண்டு அந்த நடிகையை பெண் கேட்டே சென்றார் என்று கூறினார். அதேபோல தான் விஜயகாந்த் திருமணத்திற்கு முன்பு வரை நடிகை ராதிகா உட்பட ஒரு சில நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார். ஆனால் அஜித்தும் விஜயகாந்தும் திருமணத்திற்கு பிறகு தான் ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தனர் என பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
மேலும் இருவருமே தனது ஒரிஜினாலிட்டியை மறைத்து நடிக்கவில்லை என்று கூறினார். அஜித் தன்னுடைய நரைமுடியை வைத்துக் கொண்டே இன்று வரை விக் இல்லாமல் நடித்து வருகிறார். அதே போல தான் விஜயகாந்த். மேலும் இரண்டு பேருமே மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவர்கள் என்றும் பயில்வான்.
கருணாநிதி அமர்ந்து இருந்த ஒரு மேடையில் அவர் முன்னாடி அஜித் அரசியல் பிரமுகர்களால் நடிகர்கள் துன்புறுத்தப்படுகிறோம் என வெளிப்படையாக கூறினார். அதேபோல விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரான பிறகு கருணாநிதியின் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். நடிகர் சங்கக் கடனை அடைத்தவர் விஜயகாந்த் என்றும் தனிப்பட்ட முறையில் நடிகர் சங்கத்திற்காக பெருமளவில் நிதியுதவி செய்தவர் அஜித் என்றும் இருவரை பற்றியும் மாறி மாறி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : எவ பேச்சக்கேட்டு என்னை தூக்குனீங்க!.. பாரதிராஜாவிடம் எகிறிய வடிவுக்கரசி.. படப்பிடிப்பி்ல் நடந்த பஞ்சாயத்து!…
இந்த நிலையில் இப்போது வரைக்கும் விஜயகாந்தின் புகழைப் பாடும் மதுரைக்கு அஜித் இந்த மாத இறுதியில் செல்ல இருக்கிறார் என்பதையும் பயில்வான் ரங்கநாதன் கூறினார். அதற்குக் காரணம் அவர் ஏற்கனவே திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதேபோல மதுரையிலும் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட போகிறாராம். அதன் காரணமாகவே அவர் மதுரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.