எல்லாத்துலயும் ஒதுங்கி இருக்கும் அஜித்! இத மட்டும் எப்படி பண்ணுவார்? அல்லோலப்படும் திரையுலகம்
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில்தான் அஜித்துக்கு அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறார். அதன் பிறகு விடாமுயற்சி படத்தில் தன் கவனத்தை செலுத்த இருக்கிறார் அஜித்.
இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளி நாடு செல்ல இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்காக பிரபலங்கள் ஒவ்வொருவரும் 1 கோடி நிதியுதவி கொடுத்து வருகிறார்கள். முதலில் உதயநிதி 1கோடி கொடுத்து உதவினார்.
இதையும் படிங்க: ஒருவழியா முத்து ஜெயிச்சிட்டாருப்பா!… மாலையை டெலிவரி பண்ணி பல்க் அமவுண்ட் கல்லா கட்டிட்டாரே!…
அவரை அடுத்து கமல் அடுத்ததாக விஜய் என 1 கோடி நன்கொடை கொடுத்தனர். விஜய் கொடுத்துவிட்டார் அடுத்து யார் அஜித்தான் என்று ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில் இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு தகவலை கூறினார்.
சொல்லப்போனால் அஜித்தான் முதல் ஆளாக வந்து நிதியுதவி கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் விஜயகாந்த் இருக்கும் போது நடிகர்களிடம் வசூலித்து கடனை அடைக்கலாமே? ஏன் புலம்பெயர்ந்த தமிழகர்களிடம் இருந்து பணத்தை வாங்கி கடனை அடைக்க வேண்டும்? என்ற யோசனையை சொன்னதே அஜித்தானாம்.
இதையும் படிங்க: நாங்க எடுக்குற நல்ல படங்களை பாக்காதீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் பாருங்க!.. சமுத்திரக்கனி காட்டம்!.
சொன்னது மட்டுமில்லாமல் தன்னிடம் இருந்து 10 லட்சத்தை தூக்கி கொடுத்தார் அஜித். அவர் அன்று சொன்ன கருத்தைத்தான் இப்போது இருக்கும் நடிகர் சங்கம் செயல்படுத்தி வருகிறார்கள். அதனால் அஜித்தான் முதலில் வந்து நிதியுதவி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்றுவரை அஜித்திடம் இருந்து எந்த நிதியுதவியும் நடிகர் சங்கத்திற்கு செல்ல வில்லை. ஒருவேளை இனிமேல் கொடுப்பாரா என்றும் தெரியவில்லை. இதில் அஜித்தை நெருங்க முடியாத சூழ் நிலையிலும் அஜித் இருக்கிறார். அதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை சந்திப்பார்களா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: நாங்களும் ஃபேன்ஸோட செல்ஃபி எடுப்போம்!.. அடுத்த தளபதியின் அட்டகாசங்கள் ஆரம்பம்!..