Connect with us
ajith

Cinema News

சட்டு புட்டுனு வேலைய ஆரம்பிங்க! சமாதான புறாவை பறக்கவிட்ட லைக்கா.. ரெடியான அஜித்

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருக்கிறது.

இன்னும் சிறிது நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடந்து வருகிறது. தற்போது அஜித் இரண்டு வார கால விடுமுறையை பயணமாக சென்னை வந்திருக்கிறார். இந்த நிலையில் விடாமுயற்சி படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் இன்னும் அந்த படத்தை முடித்த பாடு இல்லை.

இதையும் படிங்க: ‘மகாராஜா’ படத்துக்கு பிறகு எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு! புலம்பும் நடிகர்

அந்த படம் ஒரு வேளை வருமா வராதா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகின்றன. அதற்கு முதல் காரணம் லைக்கா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியதுதான். அஜித் தரப்பிலும் ரெடியா இருக்கிறார்கள். மகிழ்திருமேனி தரப்பிலும் ரெடியா இருக்கிறார்கள். ஆனால் புரொடக்ஷன் தயாரிப்பில் தான் கொஞ்சம் இழுபறியாக இருக்கின்றது என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் லைக்கா நிறுவனமும் அஜித்தும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு சமாதானம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் இன்னும் மூன்று நாட்களில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். சொன்ன தேதியில் அதாவது 21ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம்.

இதையும் படிங்க: என்னது மைனாவின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா? நம்பியாருக்கே டஃப் கொடுத்தவர் ஆச்சே

அதற்கு அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி மறுபடியும் தனது சொந்த வேலை காரணமாக அஜித் சென்னை திரும்புவதாகவும்  சொல்லப்படுகிறது. அது முடிந்த பிறகு மீண்டும் விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறாராம் அஜித். எப்படியும் இந்த வருடம் இறுதியில் ஆவது விடாமுயற்சி படத்தை நாம் திரையில் காண்போம் என நம்புவோம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top