மற்ற நடிகர்களுக்கு இல்லாத சிறப்பு… அஜித்துக்கு இருக்கு..! அசுர வளர்ச்சியின் ரகசியம் இதுதானாம்!

by sankaran v |   ( Updated:2025-05-01 05:38:48  )
Ajithkumar
X

Ajithkumar

Ajith: இன்று மே 1. தொழிலாளர்கள் தினம்னு எல்லாருக்கும் தெரியும். அதே போல இந்த நாள் தான் அஜித்துக்குப் பிறந்தநாள். இதையொட்டி அஜித்தின் சிறப்பு என்னன்னு பார்க்கலாமா…

அஜித்துக்கு மற்ற நடிகர்களை விட நிறைய சிறப்புகள் இருக்கு. போட்டிகள் நிறைந்த காலகட்டத்துல வந்து படிப்படியா முன்னேறி இருக்காரு. அவருக்கு தமிழ் முகம் தாண்டி அந்நிய முகமாவே இருக்கு. அவரு பேச்சும்கூட ஒரு வட இந்தியக்காரர் தமிழ் பேசுற தொனி தான்.

ஆனா இப்படி ஒரு தொனியை வச்சிக்கிட்டு தமிழ்சினிமாவுல தல என்ற இடத்திற்கு வந்துள்ளார். அதற்குக் காரணம் அவருக்குத் தன் மேல் உள்ள நம்பிக்கை. இன்னொன்னு எந்தவித பின்புலமும் இல்லாமல் வந்தது. இன்னொரு சிறப்பு என்னன்னா மற்ற நடிகர்கள் எல்லாம் நடிப்பாங்க. கூடுதலா என்னன்னா எதுலயாவது முதல் போட்டு வேலை பார்ப்பாங்க.

அஜித் சினிமாவைத் தாண்டி பெரிய மெக்கானிக். கார், விமானம் ஓட்டுறதுல விருப்பம். பைக் ரேஸ்ல ஆர்வம் உள்ளவர். பலமுறை அடிபட்டாலும் மீண்டும் மீண்டும் அதுல இருந்து சாதிப்பவர். கார் ரேஸ்ல சமீபத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரு ஆரம்பத்துல சினிமா இயக்குனர் ஆகலாம்னுதான் வந்தாரு. தெலுங்குல பிரேம புஸ்தகம் படத்தில் நடிக்கிறாரு. தமிழ்ல அமராவதி படத்துல நடிக்கிறார். ஆனா அவரு ஹீரோ கிடையாது.

படத்தைப் பார்த்ததும் அவரை எல்லாரும் உற்றுக் கவனிக்கிறாங்க. அப்புறம் ஆசை படம் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதன்பிறகு சிட்டிசன், ரெட், வாலின்னு பெரிய படங்களைக் கொடுக்கிறார். அதன்பிறகு நடிப்புக்குத் தீனி போட வரலாறு மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்கிறார். மங்காத்தா, பில்லா மாதிரி கேங்ஸ்டர் படங்கள் அவரை வேற லெவலுக்குக் கொண்டு போகுது. இன்னைக்கு அஜித் தனக்கு பட்டம் எதுவும் வேணாம்கறாரு. 40 வயசுலயே சால்ட் பெப்பர் லுக்ல வந்தாரு. டை அடிக்கிறது இல்ல.

நான் இப்படித்தான். என்னை நம்பி எல்லா படத்துக்கும் வாங்கன்னு யதார்த்தமான நடிகர். அவரு இமேஜ் பற்றி கவலைப்படாதவர். அவர் மிஸ்டர் க்ளீன் என்ற பேரு இருக்கு. அவரு யாரையும் கண்டுக்க மாட்டாரு. பொது மேடைக்கு வரமாட்டாரு என்ற குற்றச்சாட்டு இருக்கு. அஜித், ஹீரா பிரச்சனையைப் பற்றி பேச வேண்டாம். அது அவரது சொந்த வாழ்க்கை. அஜித்தைப் பொருத்தவரை ஒரு மாறுபட்ட நடிகர். பத்மபூஷண் விருதும் வாங்கி இருக்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story