அஜித்குமார் ரேஸ் டாக்குமெண்டரி!… வெளியான டீசர் வீடியோ!.. சும்மா அதிருது!…

நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்ளும் ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடிக்க முடிவெடுத்ததே அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ரேஸ் பைக், ரேஸ் கார் வாங்கலாம்,…

ajithrace

நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்ளும் ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடிக்க முடிவெடுத்ததே அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ரேஸ் பைக், ரேஸ் கார் வாங்கலாம், ரேஸ்களில் கலந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் என்பது பலருக்கும் தெரியாது.

அதனால்தான் 90களில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் பல பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார். சில விபத்துகளிலும் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.
திருமணத்திற்கு பின் மனைவி ஷாலினி கேட்டுக்கொண்டதால் அவர் பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் கார் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் டீம் பல இடங்களிலும் மூணாவது பரிசை பெற்றது.

‘மோட்டார் கார் ரேஸுக்காக கடுமையாக உழைப்பேன்.. நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்’ என அஜித் பேட்டிகளில் சொல்லி வருகிறார். இப்போது கூட மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. ஒரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் பைக் பயணம் மற்றும் கார் ரேஸ் தொடர்பான டாக்குமெண்டரி திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் எடுத்து வருகிறார்.

ajith

அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றபோதும் அங்கும் ஏ.எல்.விஜய் சென்று பல காட்சிகளை படம் பிடித்தார். இந்த டாக்குமெண்ட்ரி வீடியோ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அதன் டீசர் வீடியோ வெளியாகியிருக்கிறது. ‘Racing is not acting.. Its Real’ என்கிற தலைப்பில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் பேசும் அஜித் ‘சினிமாவை போல கார் ரேஸில் ரீடேக் செய்ய முடியாது.. ஒரு தவறு செய்தால் அது எல்லாவற்றையும் பாதிக்கும்.. மற்றவர்களையும் அது காயப்படுத்தும்.. ஒரு தவறு எல்லாவற்றையும் மாற்றிவிடும்.. அதிகமான ரிஸ்க் இருக்கிறது.. ஆனால் எனக்கு இது பிடித்திருக்கிறது.. என் குழந்தைகளும் நான் ஏன் இதை செய்கிறேன் என்பதை எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.. மோட்டார் ரேஸில் உச்சத்தை தொட அதிகமான உழைப்பை கொடுப்பேன் என்று அதில் அவர் பேசியிருக்கிறார்.