Connect with us
vidaamuyarchi

Cinema News

விடாமுயற்சி டீமுக்கு அஜித் வாங்கி கொடுத்த சரக்கு பாட்டில்!.. ஆனா எல்லாமே வீணாப்போச்சே!…

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து, பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அசர்பைசான் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. அஜித் நடித்த படங்களிலேயே மிகவும் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தது விடமுயற்சி படத்திற்குதான். இந்த படத்தை தடையற தாக்க, மிகாமன், தடம் மற்றும் கலக தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: லியோவுக்கு விட்டதை கோட்டில் நடந்திருச்சே… திருவிழா ஆரம்பம் ஆச்சு மக்கா!

இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்துள்ளனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவும் இப்படத்தில் நடித்திருக்கிறார். அவரை வைத்துக்கொண்டு அஜித் ஓட்டும் ஜீப் படப்பிடிப்பில் கீழே கவிழ்ந்த வீடியோவும் ஏற்கனவே வெளியானது.

அசர்பைசானில் எடுக்கப்பட்டது போக சில காட்சிகளை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுத்துள்ளனர். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடியும் போது படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பரிசாக எதாவது கொடுப்பார்கள். பணம், செயின் என எதாவது கொடுப்பார்கள்.

vidaamuyarchi

இந்தமுறை வேறமாதிரி யோசித்த அஜித் எல்லோருக்கும் ஒரு ஃபுல் சரக்கு பாட்டிலை வாங்கி கொடுத்திருக்கிறார். இதில் என்ன பிரச்சனை எனில் அவர்கள் எல்லோருமே தமிழகத்திலிருந்து வேலைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள். ஹைதராபாத்தில் இருந்து சில தொழிலாளர்களும் அதில் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கு சரக்கு பாட்டில் கொடுக்கப்படவில்லை.

இதில் கோபமடந்த அந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு போன் செய்து 2 பேருந்தில் செல்லும் நபர்களிடம் சரக்கு பாட்டில் இருக்கிறது என சொல்ல அவர்கள் வண்டியை வழிமறித்து சரக்கு பாட்டிலை பறிமுதல் செய்து கொண்டு போய்விட்டார்களாம்.

இதையும் படிங்க: கோட் படத்தோட கிளைமாக்ஸ்ல இயக்குனர் செய்த புதுமை… வேற லெவல் ஃபீலிங்!

google news
Continue Reading

More in Cinema News

To Top