லியோவுக்கு விட்டதை கோட்டில் நடந்திருச்சே… திருவிழா ஆரம்பம் ஆச்சு மக்கா!
GoatMovie: பொதுவாகவே விஜய் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆசைப்படும் ஒரு விஷயத்தை மீண்டும் கோட் திரைப்படத்தில் நடத்த இருக்கிறது கல்பாத்தி எஸ் அகோரம். இந்த செய்தியால் ரசிகர்கள் படத்தை கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.
அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய இடம் ஏற்று நடத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். முதலில் சயின்ஸ் பிக்சன் கதை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த எந்த ஒரு தகவல்களும் படக்குழுவில் இருந்து கசியவில்லை. ஆனால், கேப்டன் விஜயகாந்த், நடிகை திரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன், சிஎஸ்கே வீரர்கள் உட்பட ஸ்பெஷல் கேமியோ இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக விஜய் திரைப்படங்களின் முதல் நாள் ரசிகர்கள் ஷோவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சமீபத்திய நாட்களாக ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அதிகாலை ஷோக்களை தமிழ்நாட்டில் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி வேண்டும் என படக்குழு பெரிய போராட்டம் நடத்தியும் அது நடக்காமல் போனது.
இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..
இதனால் அத்தகைய திரையரங்குகள் கோட் திரைப்படத்தை அதிகாலை காட்சியாக வெளியிடுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வியை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கும் நிலையில் அது குறித்து பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.