அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் அவரா? பிரபலம் சொல்வது என்ன?

by sankaran v |   ( Updated:2025-03-31 20:30:02  )
ajith
X

ajith

Ajithkumar next movie: நடிகர் அஜீத் குமார், இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணி என்றாலே வெற்றிதான். இவர்களது காம்போவில் வீரம், வேதாளம், விவேகம் என பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. இவற்றில் வீரம் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

2014ல் சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் அஜீத் நடித்தார். ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். விதார்த், பாலா, முனீஷ், சந்தானம், நாசர், தம்பி ராமையா, அதுல் குல்கர்னி உள்பட பலரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். 2015ல் வேதாளம் படத்தில் சிறுத்தை சிவா இயக்க அஜீத் நடித்தார். சுருதிஹாசன் ஜோடியாக நடித்தார். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர். ஆனால் இந்தப் படம் சுமார் ரகம்.

இதை அடுத்து 2017ல் அஜீத், சிறுத்தை சிவா காம்போவில் விவேகம் படம் வெளியானது. அதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்தார். விவேக்ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர். இந்தப் படம் ஆவரேஜ் ஹிட் ஆனது. இப்படி அஜீத்துக்குத் தொடர்ந்து 3 படங்கள் இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா.

siruthai siva ajithஇந்த நிலையில் அடுத்து சிவாவுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்லும் பதில் இதுதான். அடுத்து சிவாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அஜீத் இருக்கிறார். என்னுடைய அடுத்த படத்தை நீங்க டைரக்ட் பண்ணுங்கன்னு சிவா கிட்ட கூட அஜீத் கேட்டதாக நான் கேள்விப்பட்டேன்.

அப்போது அஜீத்கிட்ட சிவா நான் வெளியில் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன்னு சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் உறவு மிகவும் நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்கிறது என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அஜீத்துக்கு இந்த ஆண்டில் விடாமுயற்சி படம்வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தொடர்ந்து ஆதிக்கின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ல் வெளிவர உள்ளது. இதை அடுத்து அஜீத் யாருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் சிறுத்தை சிவாவுடன் இணையலாம் என இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story