இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்...

Ajithkumar: நடிகர்கள் பல்வேறு விளம்பரங்கள் மூலம் தங்களை தானே பிரபலப்படுத்தி கொள்ளும் இந்த காலத்தில் தன்னுடைய படத்திற்காக எந்தவித புரோமோஷனும் செய்து கொள்ளாமல் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்த நடிகரென்றால் அவர் அஜித் மட்டுமே.
தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாய் அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். இதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அஜித்குமார் இன்று முன்னணி நாயகனாகவும் வளர்ந்துள்ளார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் வாசிங்க:ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…
இவர்களின் காதல் அமர்க்களம் திரைப்படத்தின் மூலமே தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதலில் ஷாலினி இப்படத்தில் நடிப்பதற்கு ஒத்து கொள்ளவில்லையாம். இயக்குனர் சரண் ஷாலினியிடம் இப்படத்தில் நடிக்குமாறு கேட்டதும் ஷாலினி தான் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிப்பதாகவும் அதனால் இப்போதைக்கு சினிமாவில் நடிக்காமல் படிப்பை கவனிக்க போவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நேரத்தில் ஷாலினி முன்னணி கதாநாயகியாக இருந்ததால் சரணுக்கு அவரை விட மனமில்லாமல் போனதாம். உடனே அஜித்குமாரை வைத்து பேச சொல்லியிருக்கிறார். அப்போது அஜித்தும் எனக்கு ஜோடியாகதான் நீங்க நடிக்க போறீங்க என கூறியது ஷாலினி சம்மதம் கூறிவிட்டாராம்.
இதையும் வாசிங்க:நடிகரை திருமணம் செய்தாரா கனகா?.. சொந்த தாயே சூனியம் வச்ச கதையா போச்சே!.. அடக்கொடுமையே!..
ஏனெனில் ஷாலினிக்கு மிக பிடித்தமான ஹீரோவாக அஜித் இருந்துள்ளார். பின் படப்பிடிப்பு நடக்கும் போதே அஜித் ஷாலினி மீது ஒருதலையாக காதல் வைத்துள்ளார். ஆனால் அதை சொல்ல முடியாமல் தவித்தாராம்.
அப்போது ஒரு நாள் இயக்குனர் சரணிடம் சென்று ‘கேப் விடாமல் தொடர்ந்து படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம். ஏனென்றால் படம் எடுக்க நிறைய நாள் ஆனால் என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை… எங்கு நான் ஷாலினியை காதலித்து விடுவேனோ என பயமாய் இருக்கிறது’.. என ஷாலினி காதில் கேட்கும்படியே கூறிவிட்டாராம். அது அங்கு சுற்றி இருந்தவர்கள அனைவருக்கும் கேட்டதாம். ஷாலினியோ அஜித் இப்படி கூறியதை கேட்டு வெட்கத்தில் சிரித்தாராம். இப்படிதான் அஜித் தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்தினாராம்.
இதையும் வாசிங்க:கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்