அஜித் வீசிய அடுத்த வெடிகுண்டு!... விடாமுயற்சியில் சிக்கி தவிக்கும் மகிழ் திருமேனி!.
விடாமுயற்சி திரைப்படத்தை எந்த நேரத்தில் துவங்கினார்களோ இப்போது வரை முடியாமல் இழுத்து கொண்டே இருக்கிறது. அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் 2023ம் வருடம் ஜனவரியில் வெளியானது. அதன்பின் ஒன்றரை வருடம் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை.
இதற்குடையில் விக்னேஷ் சிவனுடன் ஒரு படம் ஓகே செய்யப்பட்டு பின்னர் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு மகிழ் திருமேனிதான் இயக்குனர் என்றார்கள். விடாமுயற்சி படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் மகிழ் திருமேனி இந்நேரம் இரண்டு திரைப்படங்களை இயக்கி முடித்திருப்பார். ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் சிக்கி தவித்து வருகிறார் அவர்.
இதையும் படிங்க: அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!
பட வேலைகள் துவங்கி 4 மாதங்கள் கதை சரியாக செட் ஆகாமல் இழுத்துக்கொண்டே போனது. அஜித் ஒரு பக்கம் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்ற போய்விட்டார். ஒருவழியாக கதையை உறுதி செய்ய அசர்பைசான் நாட்டில் ஷூட்டிங் நடத்துவோம் என சொல்லிவிட்டார் அஜித். ஆனால், மழை, பனிப்பொழிவு என சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.
அதன்பின் அப்படத்தை தயாரிக்கும் லைக்காவுக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக அஜித்துக்கு சொன்ன படி மாத தவணை சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, அஜித் கால்ஷீட் கொடுக்காமல் இருந்தார். இதனால் அப்படத்தில் நடித்த திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் வேறு படங்களுக்கு போய்விட்டனர். அர்ஜூன் லியோ படத்தை முடித்துவிட்டு, தனது மகள் திருமணத்தை நடத்த போய்விட்டார்.
எல்லோரின் கால்ஷீட்டையும் வாங்கி படப்பிடிப்பை நடத்த படாதபாடு பட்டார் மகிழ் திருமேனி. ஒருபக்கம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திற்கு நடிக்க போனார் அஜித். அதோடு, விடாமுயற்சி ஷுட்டிங்கை உடனே துவங்கவில்லை எனில் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுதான் வருவேன் என லைக்காவுக்கு அழுத்தம் கொடுத்தார் அஜித்.
எல்லா நடிகர், நடிகைகளையும் சேர்த்து எடுக்க வேண்டிய காட்சிகள் 15 நாட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதில் ஒரு சண்டை காட்சியும் அடக்கம். விரைவில் படக்குழு அசர்பைசானுக்கு கிளம்பவிருக்கிறது. இந்நிலையில், சண்டைக்காட்சியை மட்டும் சென்னையில் செட் போட்டு எடுங்கள் என சொல்லிவிட்டாராம் அஜித். எனவே, என்ன செய்வது என முழித்து வருகிறாராம் மகிழ் திருமேனி. இந்த படம் முடிந்து வெளியானால் நிம்மதி என்கிற மனநிலையில் அவர் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.