அஜித்திடம் சரண்டர் ஆவதை தவிர வேற வழியில்ல!.. கை மாறும் ஏகே 64.. அப்போ ஹிந்தி கனவு?!..

Actor Ajith: சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களை பொருத்தவரைக்கும் அடுத்தடுத்து அவர்களுடைய படங்களின் அப்டேட்டுகள் பற்றி தான் மீடியாக்களில் பேசப்பட்ட வரும் செய்தியாகவே இருக்கும். ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா போன்ற பல நடிகர்களின் படங்கள் என்னென்ன? யார் இயக்கப் போகிறார்கள்? படத்தை தயாரிக்கப் போவது யார் ?என்ற ஒரு ஆர்வம் பத்திரிகைகள். மீடியாக்கள் இவர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கும் .

அதன் மூலம் விளம்பரத்தை தேடிக் கொள்ளும் பல மீடியாக்கள் இன்று அதிகமாக இருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஒரு மாஸ் ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புறம் விடாமுயற்சி படத்தின் வேலைகளிலும் பிசியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: அட இந்த வாரம் ஜம்முனு என்ஜாய் பண்ணலாம் போலயே… ஓடிடியில் களைக்கட்டும் தமிழ் வெப்சீரிஸ்கள்…

அடுத்தடுத்து இரு படங்களின் படப்பிடிப்புகளால் மிகவும் பிசியாக இருக்கிறார் அஜித். குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் இருக்கும் நிலையில் எப்படியாவது அந்த படத்தை முடித்து இந்த வருடம் ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்ததாக அஜித் யாருடன் இணையப் போகிறார்? எந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற ஒரு ஆர்வம் அனைவர் தரப்பிலும் இருந்து வருகிறது. ஏற்கனவே கங்குவா திரைப்படத்தின் ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்து போன அஜித் சிறுத்தை சிவாவை அழைத்து பேசியதாகவும் ஒரு வேளை அடுத்த படம் சிறுத்தை சிவா உடன் இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: சிம்பு பண்ணிய துரோகம்! துடைக்க வந்த அஜித்.. ‘குட் பேட் அக்லி’யில் இவ்ளோ விஷயம் இருக்கா?

கிட்டத்தட்ட அது உண்மை என்றும் கூறப்படுகிறது. அதனால் சிறுத்தை சிவா அஜித் இணையும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என்று வெளியாகி இருக்கிறது.

ஏனெனில் சத்யஜோதி நிறுவனத்திடம் அஜித் ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்திருந்தாராம். அதைக் காப்பாற்றும் வகையில் அடுத்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டிருக்கின்றது. ஏற்கனவே சத்யஜோதி நிறுவனம் ஒரு சம்பளத்தை பேச அஜித் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் தான் விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவனத்திடம் சென்றதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது அஜித்திடமே சரணடைந்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம்.

இதையும் படிங்க:திரும்புன இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி? கைது செய்யப்பட்ட வாசன் கதறல்…

கூடிய சீக்கிரம் அடுத்த படத்தை பற்றிய அப்டேட்டும் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் படத்தை முடித்த பிறகு தான் சிறுத்தை சிவா ஹிந்தியில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார். குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கல். அதனால் சிறுத்தை சிவா அஜித் இணையும் படம் 2025 ஏப்ரலிலேயே ஆரம்பிக்கப்பட்டு விடும். இதெல்லாம் முடிந்த பிறகுதான் சிறுத்தை சிவா ஹிந்திக்கு போவார் என்று தெரிகிறது.

 

Related Articles

Next Story