ஃபர்ஸ்ட் டைம் இவ்ளோ க்ளோஸாவா? ஜாலி பைக் ரைட்! நியூ லுக்கில் வைரலாகும் அஜித் புகைப்படம்..

Published on: August 7, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் அஜித்துக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. அதுதான் திரையுலகை சார்ந்த பல பேருக்கும் ஆச்சரியத்தை தருகிறது. என்னதான் செஞ்சிட்டாரு மனுஷன்? ரசிகர்கள் உயிரை கொடுக்கும் அளவுக்கு அவர் மீது இத்தனை அன்பை செலுத்துகிறார்கள் என்று.

சினிமாவையும் தாண்டி அஜித் மற்ற எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்லயும் கவனம்  செலுத்து வருகிறார். கார், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பயிற்சியாளர் என ரசிகர்களை தினம் தினம் இம்ப்ரஸன் செய்து வருகிறார். மொத்தத்தில் அவர் வேலையில் அவர் குறிக்கோளாக இருந்து வருகிறார்,

இதையும் படிங்க : அஜித்தின் ‘v’ செண்டிமெண்டுக்கு இவர்தான் காரணமா? விடாமுயற்சி மட்டும் ஏன் டேக் ஆஃப் ஆகல? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

ரசிகர்கள் விடமுயற்சி படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அஜித் ஜாலியாக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் சுற்றுப்பயணத்தை முடித்த அஜித் விடாமுயற்சிக்கு பிறகு உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

ajith
ajith

ஆனால் விடாமுயற்சி தொடங்குவது  மாதிரி தெரியவில்லை. அதனால் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக 13 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இதையும் படிங்கள் : மகிழ்திருமேனிக்கு அஜித் கொடுத்த ஷாக்!.. மறுபடியும் முதல்ல இருந்தா!. அட போங்கடா!..

இந்த நிலையில் அவர் சுற்றுப்பயணம் தொடர்பாக வலைதளங்களில் அஜித்தின் புதிய புதிய புகைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் இன்று அவரது மனைவி ஷாலினி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் நீயூ லுக் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

முதன் முதலாக மிகவும் க்ளோஸாக போஸ் கொடுத்திருக்கும் அஜித்தை பார்க்கும் போது அவரது கண்பக்கத்தில் எல்லாம் தோல் சுருங்கி போய் தெரிகிறது. அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.