செல்லாது செல்லாது!.. ரெண்டு பேரும் சேர வாய்ப்பே இல்லை!.. அஜித் 64 அப்டேட் இதுதான்!..

by Akhilan |   ( Updated:2024-01-28 03:33:40  )
ajith
X

Ajith: தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக இருக்கும் அஜித்தின் அடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் தான் என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வரும் நிலையில் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது தான் என்பதை பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கு பிப்ரவரி வரை தான் கால்ஷீட் என்பதை சொல்லிவிட்டதால் படப்பிடிப்பை விறுவிறுவென மகிழ்திருமேனி நடத்தி வருகிறார். அந்த படம் முடிந்த கையோடு மார்ச்சில் இருந்து ஆதிக் படத்தில் அஜித் இணைகிறார்.

இதையும் படிங்க: எம்மா இப்போ உங்களுக்கு வெட்கமே இல்லையா? ‘லால் சலாம்’ பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்

அப்படத்தினை முடித்துவிட்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. அப்படியெல்லாம் இல்லை. அஜித்துக்கு தமிழில் மட்டுமே மார்கெட். தெலுங்கில் மார்க்கெட் இல்லாத நடிகரை பிரசாந்த் நீல் எப்படி ஓகே செய்வார். இதுமட்டுமல்ல, அஜித் தற்போது தெலுங்கு தயாரிப்பு கூட்டத்துக்கு போய்விட்டார்.

இதுக்கு காரணம் ஓடிடி நிறுவனங்கள் தான். அவர்களால் தமிழ் சினிமாவுக்கே ஆபத்து வந்து விட்டது. பெரிய பட்ஜெட் படங்களை ஓடிடி வாங்க வேண்டாம் என்ற நிலைக்கு வருகின்றனர். அந்த தொகையை வைத்து தான் தமிழ் தயாரிப்பாளர்கள் ஹீரோவுக்கு சம்பளம் கொடுத்து வந்தனர்.

இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…

கோலிவுட்டில் தேர்வு செய்தால் கூட அது பெரிய பட்ஜெட் ஹீரோக்களான ரஜினி அல்லது விஜயை தான் தேர்வு செய்வார்கள். அஜித்தை ஓகே செய்வது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story