விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை தட்டி தூக்கிய அஜித் - சம்பளத்துல தல எகிறிட்டாரே

by Rohini |   ( Updated:2023-10-11 08:30:05  )
ajith
X

ajith

Ajith Next Movie Director : அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் யார் என்பதுதான் இப்போது வைரலாகி வருகின்றது.

சமீபகாலமாகவே அஜித் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் எச்.வினோத் இயக்கத்தில் மூன்று படங்கள் என ஒரு டெம்ப்ளேட்டிலேயே சுற்றிக்கொண்டு வந்தார். விடாமுயற்சி படத்தின் மூலம் தான் அந்த வளையத்திலிருந்து இப்போது வெளியே வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் கூட்டணி அமைக்க போகிறாராம். ஏற்கனவே இந்த செய்தி வைரலானாலும் 90 சதவீதம் இது உறுதி என சொல்லப்படுகிறது.

அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையப்போகும் படத்தை விடுதலை படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான் தயாரிக்க இருக்கிறார். இதனால் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்து தயாராக போகும் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என இப்பவே ரசிகர்கள் ஆராய ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தலையில் செருப்பை வைக்க சொன்ன நபர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?..

ஏற்கனவே அஜித்தை தன் குருவாக அண்ணனாக பார்ப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதுமட்டுமில்லாமல் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து டைட்டில் கார்டு போட்டிருந்தார்.

அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை ஆதிக்கிடம் ஏற்படுத்தியவர் அஜித். விஜய்க்கு எப்படி லோகேஷோ அதே போல் அஜித்துக்கும் ஆதிக் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த பாட்டை மொத்தமாக வித்யாசாகரை திட்டி தான் எழுதினேன்..! ஓபனாக உடைத்த பிரபல பாடலாசிரியர்..!

இதுவரை ஒரு அனுபவம் உள்ள மெச்சூரிட்டியான இயக்குனர்களுடனே பணிபுரிந்த அஜித்துக்கு ஆதிக்குடன் இணைவது முற்றிலும் புதுமையாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் அஜித்தை வைத்து ஒரு தரமான சம்பவத்தை ஆதிக் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் விடாமுயற்சி படத்திற்காக அஜித்தின் சம்பளம் 105 கோடியாம். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையப் போகும் படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் 150லிருந்து 175 கோடியாக உயர வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. சம்பளத்திலும் விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே போட்டி நிலவி வருவதாக புலம்பி வருகின்றனர்.

Next Story