Connect with us

Cinema History

இந்த பாட்டை மொத்தமாக வித்யாசாகரை திட்டி தான் எழுதினேன்..! ஓபனாக உடைத்த பிரபல பாடலாசிரியர்..!

VidyaSagar: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்த வித்யாசாகரை திட்டியே ஒரு பாட்டு வந்து இருக்கிறது என்றால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி விடுவார்கள் தானே. அதை செய்த பாடலாசிரியரே ஒரு பேட்டியில் ஓபனாக சொல்லிவிட்டார்.

90களில் தொடங்கி 2013 வரை தமிழ் சினிமாவில் ஆட்சி செய்த முக்கிய இசையமைப்பாளரில் வித்யாசாகரும் ஒருவர். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் இசையமைத்து இருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கூட பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அங்கயும் மிரட்டுனாங்க! பிரச்சினை வராத நாளே இல்ல போல – லியோ படத்தில் பட்ட வேதனையை பகிர்ந்த இயக்குனர்

இப்படிப்பட்டவரை திட்டி தான் ஒரு பாடலை எழுதினேன் என யுகபாரதி கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பேச்சில் இருந்து, முதல்முறையாக நான் வித்யாசாகரை சந்திக்கும் போதே எங்களுக்குள் முட்டிக்கொண்டது. அவர் என்னிடம் என்ன பாட்டு எழுதிருக்கீங்க எனக் கேட்டார். நான் பல்லாங்குழியில் பாடலை எழுதியதாக சொன்னேன். அந்த பாட்டு சம்மந்தமே இல்லாம இருக்கே என என்னை வம்புக்கு இழுத்தார். இதனால் ரன் படத்திற்காக தான் அவரை காண சென்றேன்.

அந்த பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஒரே பயம். இவர் தான் எழுதணுமா என வித்யாசாகர் கேட்டார். என் முதல் படத்துல இவர் தான் எழுதினார் என செண்ட்மெண்ட் என லிங்குசாமி சொன்னதும் எனக்கே கடுப்பாகி விட்டது. நல்லா எழுதினார் எனக்கூட சொல்லலை. செண்டிமெண்ட்டுனு சொல்றாரே என எரிச்சலாக இருந்தேன்.

உடனே வித்யாசாகர் ட்யூனை சொன்னார். கடிதம் லெவலில் இருக்க வேண்டும். ஆனால் பாசமாக எதுவுமே இருக்க கூடாது என்பதை கறாராக சொல்லி விட்டார். அவர் சொல்லியதெல்லாம் என்னை வேண்டாம் என்பது போலவே இருந்தது. நான் கடுப்பில் லிங்குசாமியிடம் நீங்க இசையமைப்பாளரை மாத்துங்க எனச் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

இதையும் படிங்க: கமலுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினிகாந்த்… படமும் மாஸ் ஹிட்டாம்..!

வீட்டுக்கு வந்துட்டேன். அப்போ கால் செய்த லிங்குசாமி நீங்க பேசியதெல்லாம் சரி தான். ஆனா பாட்டு எழுதுறதை மறந்துடாதீங்க எனக் கூறி விட்டார். எழுதிட்டு வாங்க. வித்யாசாகர் பிடிக்கலை சொன்ன அப்போ பார்க்கலாம் எனக் கூறிவிட்டார். அப்போ நான் படித்த சித்தர் பாட்டில் பிசாசே என்ற வார்த்தை இருந்தது.

அடுத்த நாள் காலை என் நண்பர் கால் செய்தார். அவர் எதோ செளக்கியமா இருக்கேனு சொல்லு எனக் கூறினான். அப்போ இரண்டாவது வரியையும் பிடித்து விட்டேன். காதல் பிசாசே ஏதோ செளக்கியம் பரவாயில்லை என எழுதிவிட்டேன். அடுத்து அந்த மொத்த பாடலுமே வித்யாசாகரை திட்டி தான் எழுதி இருக்கேன். அவருக்கு இந்த விஷயம் தெரியும். அந்த வரிகளை பார்த்து விட்டு வித்யாசாகர் என்னை கட்டிப்பிடித்து பாராட்டி விட்டு என்னுடைய எல்லா பாடல்களுக்கு இனி நீ பாடல் எழுதுவாய் எனக் கூறியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top