Connect with us

Cinema News

அவங்க தான் செய்யணும்.. நான் செய்ய மாட்டேன்.. அஜித்தின் கொள்கை இதான்..

Ajithkumar: தமிழ் சினிமாவில் இருக்காரா? இல்லை எங்கு இருக்கார் என ஒரு நடிகரை தேடணும் என்றால் அது கண்டிப்பாக அஜித் தான். நடிப்பது என் வேலை. மத்த எதுக்குமே நான் இல்லை என்பதை தன்னுடைய படக்குழுவிடம் பதிய வைத்துவிட்டார். இது படத்துக்கு மட்டுமல்ல பொது நிகழ்விலும் தான்.

சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மக்கள் கஷ்டப்பட்ட போது அஜித் அதை செய்தார். இவ்வளவு கொடுத்தார் என செய்தி வந்தது. அதில் சில பொய் தகவல்கள் கூட அதிகமாக பரவியது. அதுகுறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறுகையில், கண்டிப்பாக அதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பாக தான் இருந்தது. நக்கலுக்காக சிலர் செய்தது மாறி மாறி கடைசியில் சிலர் அதை உண்மை என்றே நம்பி விட்டனர்.

இதையும் படிங்க: எழில் பிரச்னையை சொல்ல முடியாமல் தவிக்கும் பாக்கியா… வெடித்த செழியன் பிரச்னை..!

பொதுவாகவே அஜித்துக்கு ஒரு பழக்கம் இருக்கு. மக்களுக்கான சேவையை செய்ய வேண்டியது அரசு தான். அது அவர்கள் வேலை. நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன். இதை மட்டுமே அவர் செய்வார். அதுக்கென்று அவர் உதவியே செய்ய மாட்டார் எனக் கூறவில்லை. அதை வெளிப்படையாக செய்ய மாட்டார்.

அப்படி எதுவும் இயற்கை சீற்றத்துக்காக நிதி கொடுக்க நினைத்தால் அதை நேரடியாக முதல்வர் நிதிக்கு தான் கொடுப்பார். இதை அவரோ அவரின் மனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக செக்காக மட்டுமே கொடுத்துவிடுவார். இல்லை நேரடியாக ஆன்லைனில் மாற்றிவிடுவார். ஹெலிகாப்டரில் சாப்பாடு போடுவது, மக்களை தன் வீட்டில் தங்க வைப்பது இதையெல்லாம் அஜித் செய்யவே மாட்டார்.

இதையும் படிங்க: வார்த்தையை விட்ட விஜயா.. எரிமலையாய் வெடித்த மீனா..! பாவமாய் நின்ற முத்து..!

அப்படி இந்த சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு 10000 கொடுத்ததாக பரப்பட்டு வரும் தகவல் கூட உண்மையே இல்லை. அப்படி ஒரு தகவலை நீங்க பார்த்தால் கூட சிரித்து கொண்டே கடந்து சென்று விடுங்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top