அஜித்தை பத்தி தெரியாம பேசுறாங்க - இத நிறுத்துனா நல்லது! பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி

by Rohini |
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது தன்னுடைய பைக் சுற்றுப்பயணம் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறார். ஆனால் விடாமுயற்சி படம் இன்னும் வேலைக்கே ஆவாது, படம் டிராப் ஆகி விட்டது என்று பல வதந்திகள் இணையத்தை முற்றுகையிட்டு வருகின்றன.

ajith1

ajith1

இதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கையாளர் சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது ஊடகத்தை பொறுத்தவரைக்கும் சரி சமூக வலைதளங்களை பொறுத்தவரைக்கும் சரி ஒரு படத்தை பற்றி அப்டேட் வந்ததும் உடனே படத்தை வெளியிட வேண்டும் என்றுதான் அவசரப்படுகிறார்கள்.

ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எப்படி டிராப் செய்யமுடியும்? அதுவும் அஜித்தின் இயல்பு தெரியாமல் பேசிக் கொண்டு வருகிறார்கள். அவர் பொதுவாகவே ஒரு சரியான நேரத்திற்காக காத்திருக்க கூடியவர். அது படமாகட்டும் , பைக் ரேஸ் ஆகட்டும் நேரத்தை பார்த்து இறங்குவார்.அதே போல்தான் இந்தப் படத்திற்கும் காத்துக் கொண்டிருக்கிறார்.

ajith2

ajith2

சரியான நேரம் வரும் போது படம் கண்டிப்பாக தொடங்கும். மேலும் ஜூன் இரண்டாவது வாரத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் . அதுவரைக்கும் இந்த மாதிரி பேசுவதை நிறுத்திக் கொள்வது மிகவும் நல்லது என பத்திரிக்கையாளர் சங்கர் கூறினார்.

இதையும் படிங்க : என்கிட்டயும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க! – நானும் face பண்ணேன்.. விஜய் பட நடிகை ஓப்பன் டாக்

Next Story