காதலர் தினத்துக்கு சர்ப்பரைஸ் கொடுக்கப் போகும் அஜித்!.. அப்பாடா இப்பவாவது சொல்றீங்களே!..
Actor Ajith:தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். உலகெங்கிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர் நடித்த அசல் படத்திற்கு பிறகு ரசிகர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது என எதிலும் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார் அஜித்.
இருந்தாலும் அஜித்தை பின் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் விடாமுயற்சி.
இதையும் படிங்க: ஜனகராஜுக்கு பேர் வாங்கி கொடுத்த அந்த காமெடி!.. எல்லாத்துக்கும் ரஜினிதான் காரணமாம்!..
இந்தப் படத்தில் ஆரவ் மற்றும் அர்ஜூன் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்க தற்போது அங்கு நிலவும் கால நிலை காரணமாக படப்பிடிப்பை வேறொரு இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை தவிற வேறெந்த அப்டேட்டும் வராத நிலையில் ஆங்காங்கே இருக்கும் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என செய்திகளில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என் மகளுக்காக கேட்ட விஷயம்.. பிரதீப் இப்படி பண்ணுவாருனு நினைக்கல! மன உளைச்சலில் ஐஷுவின் தந்தை
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே படப்பிடிப்பை பிப்ரவரியில் முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக ஒருவேளை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: கொலவெறி பாட்டுதான் படத்தையே காலி பண்ணிச்சி!. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!…