இந்த தடவ வாக்கு மீற மாட்டோம்! விஸ்வரூபம் எடுத்த ‘விடாமுயற்சி’ – ஆயுதத்தை கையில் எடுத்த மகிழ்திருமேனி

Published on: July 27, 2023
ajith
---Advertisement---

எப்படியோ விடா முயற்சி விஸ்வரூபம் எடுக்கப் போகிறது. நெட்டிசன்கள் விடாமுயற்சியை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தேதியில் ஆரம்பிக்கிறோம் .அப்பொழுது ஆரம்பிக்கிறோம் என ஒவ்வொரு தடவையும் ரசிகர்களை ஏமாற்றித்தான் வந்தார்கள் விடாமுயற்சி படக்குழு. இதனால் ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்களே கடுப்பாகி விட்டனர்.

இதை எதையும் கண்டுகொள்ளாமல் அஜித் அவருடைய பைக் சுற்று பயணத்தில் தான் கவனம் கொண்டிருந்தார். இதுவே ரசிகர்களை மேலும் வெறுப்புக்கு ஆளாக்கியது. தலையில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை அஜித் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இப்படி அவர் சொந்த வேலையிலேயே ஆர்வம் காட்டி வருகிறார் என ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்தனர்.

ajith1
ajith1

இந்த நிலையில் சமீபத்தில் கூட வெளியூர் சுற்றுபயணத்திலிருந்து நேற்றுதான் அஜித் சென்னை திரும்பி இருக்கிறார். இவர் திரும்பிய அதே நேரத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிப்பதில் ஒட்டுமொத்த பட குழுவும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ஸ்க்ரிப்ட் தயார் செய்து அதை லைக்கா சுபாஷ்கரனிடம் வீடியோ கால் மூலம் தெரிவிக்க கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது என சொல்லப்படுகிறது.

படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு செய்யும் படலம் நடந்து கொண்டு வருகின்றது. படத்திற்காக ஒரு சில நடிகர் நடிகைகளை மகிழ்திருமேனி தேர்வு செய்து வைத்திருக்கிறாராம் .அதை லைக்கா சுபாஷ்கரனிடம் காட்டுவதற்காகவே லண்டன் சென்றிருக்கிறாராம் மகிழ் திருமேனி.

ajith2
ajith2

இன்னும் ஓரிரு நாட்களில் மகிழ் திருமேனி சென்னை திரும்பியதும் ஆகஸ்ட் 18ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலாக கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த தடவை கண்டிப்பாக விடாமுயற்சி டேக் ஆப் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.