எவனும் என்னை இப்படி வேலை வாங்கினது இல்லை!.. ஆதிக்கை இப்படி சொல்லிட்டாரே அஜித்!....

by சிவா |
ajith
X

அஜித் எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும். பெரும்பாலும் அதிக ரிஸ்க் எடுக்கமாட்டார். மிகவும் ஸ்ட்ரெய்ன் செய்து நடிக்க மாட்டார். கோட் சூட் போட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவார். கலர் கலர் கூலிங்ஸ் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுப்பார். அதிக பட்சம் பைக் மற்றும் கார் ஓட்டுவது அவருக்கு பிடிக்கும் என்பதால் அது போன்ற காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் கொஞ்சம் ஆர்வம் காட்டுவார்.

மற்றபடி பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். இது அவரை வைத்து படமெடுத்த எல்லா இயக்குனர்களுக்கும் தெரியும். அஜித்திடம் கொஞ்சம் வேலை வாங்கியவர் சிறுத்தை சிவா என்று சொல்லலாம். அவர் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்திருப்பார் அஜித்.

Ajith

Ajith

அதிலும் விவேகம் படத்திற்காக உடற்பயிற்சியெல்லாம் செய்து தொப்பையை கரைத்து நடித்திருந்தார் அஜித். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார். இதில், வலிமை படத்தில் சில காட்சிகளில் வேகமாக பைக் ஓட்டி நடித்தார்.

அஜித்தை ஸ்டைலாக, மாஸாக காட்டினாலும் போதும் என்கிற எண்ணம் பல இயக்குனர்களுக்கும் இருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி அஜித் நடித்து வெளியான பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் வெற்றியே அந்த எண்ணத்திற்கு காரணம்.

good bad ugly

இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறாது. அதேநேரம் இந்த படம் துவங்கி 6 மாதம் ஆகியும் பல காரணங்களால் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை. எனவேதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நடிக்கப்போனார் அஜித். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. இந்த படத்தில் அஜித் 3 வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போது விடாமுயற்சி படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘ஆதிக் அளவுக்கு இதுவரைக்கும் என்னை யாரும் வேலை வாங்கினதே இல்லை. பெண்டு கழட்டுறான். பெரிய டைரக்டரா வருவான். எனக்கே ஆச்சர்யமா இருக்கு’ என சொன்னாராம் அஜித்.

Next Story