AK 64: பூசாரியே இல்லாம பூஜையா? தொடர் சிக்கலில் ‘ஏகே 64’.. எதையும் கண்டுக்காத அஜித்

ஒரு பக்கம் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சிக்கல். இன்னொரு பக்கம் பிப்ரவரி மாதம் அஜித் படம் தொடங்குமா தொடங்காதா என்ற சந்தேகம். இப்படி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றிடமே தற்போது உருவாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை வருடங்களாக மாறி மாறி உச்சத்தில் இருந்த இரு பெரும் நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க இப்போது அந்த போட்டியே இல்லாத போது ரசிகர்களுக்கே ஒரு வித சளிப்பு வந்துவிட்டது.

இந்த நிலையில் அஜித் ஆதிக் இணையும் படம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தொடங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதே நேரம் இன்னும் அந்தப் படத்திற்கான தயாரிப்பாளரும் முடிவாகவில்லை. அப்படியிருக்கும் போது எப்படி பிப்ரவரி மாதம் அந்தப் படத்தை தொடங்குவார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்கிடையில் ஆரம்பத்தில் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் ஆதிக் இயக்குவதாக இருந்தால் இந்தப் படத்தை தயாரிக்க மாட்டோம் என்றும் சொல்லியிருந்தார்கள். இப்போது எந்த தயாரிப்பாளரும் முன்வராத நிலையில் மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கும் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் ஏற்கனவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார நெருக்கடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராம்சரணை வைத்து பெட்டி என்ற படத்தை மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மார்ச் மாதம் அந்தப் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்னொரு பக்கம் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்தும் ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்கள். அந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறது. இப்படி இரு பெரும் நடிகர்களின் படங்களுக்கும் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் இருக்கும் இந்த நிறுவனம் எப்படி அஜித் படத்தை எடுப்பார்கள் என்ற வகையிலும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. பேசாமல் ஏகே புரடக்‌ஷன் என்ற பெயரில் அஜித்தே எடுத்தால்தான் இந்தப் படம் டேக் ஆஃப் ஆகும் என்று கலாய்த்து வருகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago