ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. மேலும், அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது..
ஆனால் அஜித் 185 கோடி சம்பளமாக கேட்டதாலும், படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி வந்ததாலும் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை .மும்பைக்கெல்லாம் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார்கள்.. ஆனால், எதுவும் கிளிக் ஆகவில்லை. இந்நிலையில்தான், தற்போது மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது..
ஆனால் இப்போதுள்ள வியாபாரப்படி 185 கோடி சம்பளமாக கொடுக்க முடியாது. 50 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறோம்.. படத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என சொல்ல அதை அஜித்தும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
மொத்தமாக ஏகே 64 திரைப்படம் 167 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் எனத் தெரிகிறது.. அனேகமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்..



