தெலுங்கு சினிமா ரசிகர்களால் பாலையா என கொண்டாடப்படுபவர் பாலகிருஷ்ணா. 50 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார், 80, 90 களில் இவரின் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியாக வந்தது.
கடந்த பல வருடங்களாக அதிரடி ஆக்சன் படங்களில் நடிக்க துவங்கி விட்டார் பாலையா படம் என்றாலே அதிரடியான சண்டை காட்சிகளும், பன்ச் வசனங்களும் இடம் பெற்றிருருக்கும். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இவரின் படங்கள் ஆந்திராவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. போயாபட்டி சீனு இயக்கத்தில் பாலையா நடித்து 2001ம் வருடம் வெளியான அகண்டா சூப்பர் ஹிட் அடித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அகண்டா 2 படம் உலகமெங்கும் வெளியானது.
இந்த படத்தை பாலையா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படம் வெளியாக 5 நாட்களில் இந்த படம் இந்தியாவில் மட்டும் 70 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் வசூலையும் சேர்த்தால் இந்த படம் 90 கோடியை தாண்டி இருக்கும் என்கிறார்கள். எனவே இன்னும் ஒரு நாளில் இப்படம் 100 கோடி தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

