விஜய் முழுசா மார்க்கெட்டை இழப்பாரு..- சர்ச்சையை கிளப்பிய அரசியல் பிரமுகர்..!
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்களில் நடிகர் விஜய்யும் முக்கியமானவர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர் விஜய் என கூறப்படுகிறது.
தற்சமயம் அவர் நடித்த வாரிசு திரைப்படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து ஹிட் அடித்தது. அதனை அடுத்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்திற்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் அரசியல் பிரமுகரான ஏ.எல் சூர்யா நடிகர் விஜய் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இவர் ஏற்கனவே பல பேட்டிகளில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசி வந்துள்ளார்.
ஏ.எல் சூர்யாவின் சர்ச்சை பேச்சு:
நடிகை த்ரிஷாவும் அவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக கூறியுள்ளார். இறை நம்பிக்கை அதிகம் கொண்ட ஏ.எல் சூர்யா தனக்கு எதிர்க்காலத்தை கணிக்க தெரியும் என பல பேட்டிகளில் கூறியுள்ளார். எனவே நடிகர் விஜய்யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டார் நிருபர்.
அதற்கு ஏ.எல் சூர்யா பதிலளிக்கும்போது எதிர்காலத்தில் விஜய்க்கு சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் போகும். அவருக்கு சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் போகும். அதே சமயம் நடிகை த்ரிஷாவிற்கு வளமான எதிர்காலம் உள்ளது. சினிமாவை தாண்டி அவர் அரசியலிலும் பல சாதனைகளை படைப்பார் என பதிலளித்துள்ளார்.
இவரது பதில் நெட்டிசன்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.