Cinema News
என்னது யூடியூபர்களால் சினிமா அழிகிறதா? திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய பிரபலம்
யூடியூபர்களால் சினிமா அழிந்து போகுது. அவர்களைத் தியேட்டருக்கு உள்ளேயே விடக்கூடாது. ஒரு பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை முன்னாடி நின்னு வாங்காதீங்கன்னு சொல்வீங்களான்னு திருப்பூர் சுப்பிரமணியன் காட்டமாகப் பேசியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் சினிமாவை மட்டும் ஏன் தாக்குறீங்க. 7 நாள் கழிச்சித் தான் ரிவியூ பண்ணனும் தயாரிப்பாளர்களைக் கோர்ட்ல போய் ஆர்டர் வாங்கச் சொல்றாரு.
Also read: அப்போ எல்லாம் பொய்யா கோபால்.. கீர்த்தியின் 15 வருட காதலர் இவர்தானாம்!..
நான் கோடிக் கணக்கில பணம் போட்டுப் படம் பண்றேன். இதை நீ எப்படி விமர்சனம் பண்ணுவேன்னும் கேட்டுள்ளார். இவருடைய கேள்வியில ஒரு சில விஷயங்கள் நியாயமா தெரியும். இன்னொன்னு சிலர் காட்டுக் கத்தல் கத்துறாங்க. அது உண்மையான விமர்சனம் இல்லை. இன்னொன்னு அதைப் பார்த்துட்டும் மக்கள் படம் பார்க்கப் போறது இல்லை. அவரு சொன்னதுல ஒண்ணை நீக்கிடலாம்.
7 நாள்களுக்குப் பிறகு விமர்சனமா?
7 நாள் கழிச்சித் தான் படம் விமர்சனம் பண்ணனும்னு சொல்றாரு. அப்படின்னா அந்தப் படத்தை விமர்சனம் பண்ணத் தேவையில்லை. ஏன்னா 7 நாள் படம் ஓடுறது இல்ல. ரொம்ப நல்ல படங்களே 7 நாள் தான் ஓடுது. அதனால 7 நாள் கழிச்சி படம் விமர்சனம் பண்ணினா தியேட்டர்ல உள்ள சீட் மட்டும் தான் படத்தைப் பார்க்கும். என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் இவர். என்னன்னு பாருங்க.
இவருக்கு மட்டும் தான் அக்கறையா?
தயாரிப்பாளர்களுக்கு இவருக்கு மட்டும் தான் அக்கறை இருக்குங்கற மாதிரி பேசுறாரு. யூடியூபர்களுக்கே அவங்க தான் சாப்பாடு போடுற மாதிரி பேசுறாரு. ஆனா இவங்க அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுறவங்க மக்கள். அதைத் தெளிவா தெரிஞ்சிக்கிட்டுப் பேசணும். அவருக்குத் தெரியாதது எல்லாம் கிடையாது. ஏன்னா அவரு பயங்கர அனுபவம் உள்ளவர்.
திருப்பூர் சுப்பிரமணியம் சொல்றாரு. அதுல நியாயம் வேணும். யூடியூபர்கள் மேல கோபப்படுறாரு. எந்தத் தயாரிப்பாளர்கள் மேலயாவது கோபப்பட்டாரா?. என்னைக்காவது நல்ல கதைகளைக் கேட்டுருக்கீங்களான்னு கேட்டு இருக்காரா? ஏன்னா இவரு சொன்ன படம் என்ன தெரியுமா? கங்குவா, வேட்டையன், இந்தியன் 2.
இதுல இந்தியன் 2 படத்தைப் பார்த்தா பிரம்மாண்டமான சீரியல் மாதிரி இருக்கும். அந்தப் படத்தை இவ்வளவு பணம் கொடுத்து எதுக்கு பார்க்கணும்? வேட்டையன் படத்தையும் மக்கள் பார்த்தாங்க. நல்லாருந்துச்சுன்னு சொன்னோம். அதே மாதிரி கங்குவா படத்தை இளைஞர்களே ரொம்ப சத்தமா இருக்குன்னு சொன்னாங்க. அப்படின்னா ஒரு படத்தை 250 ரூபா கொடுத்து படம் பார்க்குறோம்.
1008 ஓட்டைகள் இருக்கு
விலை ஏற்றத்துல எடுத்துக்கிட்டாலும் 90களில் 5 ரூபாய்க்கு இருந்த டிக்கெட் இன்னைக்கு 250 ரூபாய்க்குப் போயிருக்குன்னா எத்தனை மடங்கு ஏறிருக்கு? மற்ற பொருள்கள் இத்தனை மடங்கு ஏறிருக்கா? அப்படின்னா சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்த அநியாய விலை? அதே தியேட்டர்ல 5 ரூபா பொருளை 25 ரூபாய்க்கு விற்கிறீங்க. இது சட்டப்படி தப்பு இல்லையா? அதே எம்ஆர்பி தானே. ஒங்களுக்குள்ள 1008 ஓட்டைகள் இருக்கு. முதல்ல ஒரு படம் பண்ணும்போது இந்தக் கதை நல்ல கதையா இருக்கணும்.
பல தயாரிப்பாளர்கள் ரஜினி, விஜய், அஜீத் நடிச்சா ஓடும்னு நினைக்கிறாங்க. நடிகர்களைப் பார்க்குற அவங்க கதை அம்சத்தைப் பார்க்குறாங்களா? இயக்குனர்களும் பார்க்கல. நடிகர்களுக்கும் சமூக அக்கறை வேணும். லியோ மாதிரி ஏன் மோசமான படத்துல விஜய் நடிச்சாருன்னு பேசுங்க. இந்த மாதிரி கெட்ட படத்தை எடுத்தா தியேட்டர்ல போட மாட்டோம்னு பேசுங்க.
நல்ல பொருளைக் கொடு
அதை எல்லாம் பேசாம யூடியூர்கள் எதுக்கு விமர்சனம் பண்றாங்கன்னு பேசுறாரு. பேக்கரியில ஒரு பொருள் சரியில்லன்னா அதைக் கொண்டு போய் நல்ல பொருளைக் கொடுன்னு சொல்லுவோம். அதே மாதிரி ஜவுளிக்கடையிலும் சொல்வோம். நகைக்கடையில் பெரும்பாலும் அந்தப் பிரச்சனை இல்லை. இப்போ திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு நான் ஒரு கேள்வி கேட்குறேன். பேக்கரியில கேட்குற மாதிரி பணத்தைத் திருப்பிக் கேட்கறோம்.
திருப்பிக் கொடுத்துருக்காங்களா?
Also read: Biggboss Tamil: வீட்டைவிட்டு ‘வெளியேறிய’ ரியாவின்… மொத்த ‘சம்பளம்’ இதுதான்?
அதே மாதிரி தியேட்டர்ல படம் சரியில்லன்னா திருப்பிக் கேட்டா கொடுப்பாரா? 5 மணி நேரம் வேஸ்ட் ஆகியிருக்கு. மணிக்கு 500 ரூபா, 5 மணி நேரத்துக்கு 2500 ரூபா கேட்டா திருப்பிக் கொடுப்பாரா? அப்படின்னா உங்க பணம் மட்டும் பணம். நீங்க என்ன வேணாலும் செய்யலாம். தியேட்டர்ல படம் ஓடலைங்கறதுக்கு மக்களா பொறுப்பு. எந்த தியேட்டர் ஓனராவது, நடிகராவது திருப்பிக் கொடுத்துருக்காங்களா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.