அவசரப்பட்டு செல்லக்குட்டிய திட்டிடோமே.!? வருத்தத்தில் ரசிகர்கள்.!

சமீபத்தில் திரரையரங்கில் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்த பிரமாண்ட திரைப்படம் என்றால் அது RRR திரைப்படம் தான். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கி இருந்தார். அல்லூரி சீதாராம ராஜு மாறும் கொம்மராம் பீம் ஆகியோர் வாழ்க்கை வரலாறை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக ராம் சரண், ஜூனியர் என்.டி ஆர் ஆகியோர் கதாபாத்திரங்கள் வடிவமைக்க பட்டிருந்தன. பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு குறைந்த அளவு காட்சிகளே இருந்திருக்கும் .
அதனால், ஆலியா பட் விரக்தியடைந்து, இயக்குனர் ராஜமௌலியை தனது சமூக வலைதள பக்கங்களின் இருந்து பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என செய்தி நேற்று தீயாய் பரவியது. மேலும், RRR சம்மந்தமாக பதிவிட்டிருந்த போஸ்ட்களை நீக்கிவிட்டார் எனவும் கூறப்பட்டது.
ஆனால், அந்த செய்தியை கொண்டு, ஆலியாவின் இன்ஸ்டா பக்கத்தை ஆராய்ந்த போதுதான் தெரிந்தது, ராஜமௌலியை இன்னும் பின்தொடர்ந்து தான் வருகிறார் என்று. மேலும் RRR பட போஸ்ட்டர்களை இன்னும் அவர் நீக்கவில்லை. ஆனால், அதற்குள் சமூக வலைத்தளங்களில் தீயாய் செய்தி பரவி விட்டது.
இதையும் படியுங்களேன் - அந்த ஹீரோயினை நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன்.! சிவகார்த்திகேயன் அலுச்சாட்டியம்.!
ஆனால், ஆலியா பட், ராஜமௌலி மீது கோபத்தில் இருப்பது உண்மைதான் போல, அதனால், தான் தற்போது வரை ரிலீசுக்கு பிறகு ஆலியா எந்த RRR போஸ்டரையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.