அங்கயும் மிரட்டுனாங்க! பிரச்சினை வராத நாளே இல்ல போல – லியோ படத்தில் பட்ட வேதனையை பகிர்ந்த இயக்குனர்

Published on: October 11, 2023
rathna
---Advertisement---

Leo Movie: விஜயின் நடிப்பில் லியோ படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் லியோ. படத்தை பற்றிய ஹைப் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு பக்கம் பிரச்சினைகள் தொடர இன்னொரு பக்கம் படத்தை பற்றிய ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. லோகேஷ் மற்றும் அவருடையஎ உதவியாளர்கள் என லியோ படத்தை பற்றிய அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கத்துக்கே சிறப்பு காட்சி இல்லையா!.. மாஸ் காட்டிய தளபதி.. லியோவுக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!..

விஜய் படம் என்றாலே பிரச்சினை இல்லாமல் வெளிவராது. அந்த வகையில் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு வருகின்றது. ஒரு பேட்டியில் இயக்குனர் ரத்னகுமார் படப்பிடிப்பிற்கு லோக்கேஷன் பார்க்கப் போன இடத்திலேயே பிரச்சினை ஆரம்பமானது என்று கூறினார்.

முதலில் மூணாறில் தான் லியோ படப்பிடிப்பை நடத்த திட்ட்மிட்டிருக்கிறார்கள். குளிரான மலைப்பிரதேசத்தில் அமைந்த ஒரு கதையாகத்தான் லியோ இருந்ததாம். அதனால் மூணாறுக்கு சென்று பார்த்த போது இந்த இடத்தில் விஜயை வைத்து படப்பிடிப்பை நடத்தவே முடியாது என்று தெரிந்து கொண்டார்களாம்.

இதையும் படிங்க: விஜயிடம் தலைவர்171 கதையை சொன்ன லோகேஷ்…! எனக்கு இப்படி கதை பிடிக்காதுடா..!

அதுவும் போக போறவங்க எல்லாருமே பார்த்து இருந்துக்கோங்கனு மிரட்டும் தொணியில் சொல்லிட்டு போனாங்களாம். இதை கூறிய ரத்னகுமார் பாதுகாப்பு கொடுக்கிறவர்களே மிரட்டும் போது என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தோம் என்று கூறினார்.

அதன் பிறகு புரடக்‌ஷனில் இருந்த ஒருவர்தான் காஷ்மீரில் உள்ள ஒரு வீட்டை புகைப்படத்தின் வாயிலாக காட்ட இதைத்தான் எதிர்பார்த்தோம் என ஒட்டுமொத்த படக்குழுவையும் காஷ்மீருகு மாற்றினாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: ரஜினியின் வில்லன் மீது இரக்கம் கொண்ட ரசிகர்கள்… அப்போ அந்த காட்சி வேணாம்… தூக்கி போட்ட படக்குழு..!

அங்கு முழுவதும் குளிர் பிரதேசம். அதனால் ஒரு பக்கம் ஐஸ் இன்னொரு பக்கம் நெருப்பு இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் அங்கு லியோ படத்தின் கதை வேறொரு வடிவில் உருவானது என ரத்னகுமார் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.