Connect with us

Cinema History

ரஜினியின் வில்லன் மீது இரக்கம் கொண்ட ரசிகர்கள்… அப்போ அந்த காட்சி வேணாம்… தூக்கி போட்ட படக்குழு..!

Rajinikanth: ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் போக்கிரி ராஜா. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் முத்துராமன். ஆனால் அவர் இந்த படத்தின் சில காட்சிகளில் தான் இருந்தார். அதற்கு பின்னால் சில சுவாரஸ்ய தகவலும் இருப்பதாக தெரிகிறது.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். பின்னர் தொடர்ச்சியாக நடித்து அவர் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்தி கொள்ள பல வருடம் தேவைப்பட்டது. அதை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொண்டு தனக்கான இடத்தினை பிடித்தார்.

இதையும் வாசிங்க:லியோ கிளைமேக்ஸ்ல ராஜமெளலி ஹீரோவா?.. லோகேஷ் கனகராஜ் இறங்கி செய்ய ஆரம்பிச்சிட்டாரா?..

அப்படி ரஜினி வளர்ந்து வந்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பலர் ஒப்புக்கொள்ளாமல் மறுத்து இருக்கிறார்களாம். ரஜினியின் ஒரு படத்துக்கு முத்துராமனை அணுகி இருக்கிறார் கலைஞானம். ஆனால் அவரோ நானே ஹீரோவா நடிக்கிறேன். என்னை போய் வில்லனா நடிக்க கூப்பிடுறீங்களே எனக் கடுப்படித்து இருக்கிறார்.

இப்படி இருந்த சூழ்நிலையில் ரஜினிகாந்தின் ஹிட் படமான போக்கிரி ராஜா படத்துக்கு வில்லன் தேடல் நடந்து வந்தது. அப்போ முத்துராமனை வில்லனாக்கலாம் என பஞ்சு அருணாச்சலம் முடிவெடுத்து இருக்கிறார். அப்போ படத்தின் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

இதையும் வாசிங்க:லோகேஷ் சொன்னா விஜயிக்கு புத்தி இல்லையா..? இதை சொல்ற அளவு அவர் பெரிய ஆளா..?

அவரை போய் பார்த்து ஒப்புதல் வாங்கிட்டு வரது உங்க பொறுப்பு எனக் கூறிவிடுகிறார். முத்துராமனை காண முத்துராமனே செல்கிறார். ஆனால் முத்துராமன் அத்தனை எளிதாக ஓகே சொல்லிவிடவில்லையாம். நானே ஹீரோவா நடித்துட்டு இருக்கேன். ரஜினிக்கு வில்லனாகி அடி உதை வாங்கனுமா எனக் கேட்டாராம்.

ஆனால் பஞ்சு அருணாச்சலம் இந்த கதையில் மட்டும் நீங்க நடித்தால் உங்க வீட்டு வாசலில் எத்தனை கார் நிற்கும் எனச் சொல்லி நடிக்க வைத்தாராம். அப்படத்தில் முத்துராமன் நிறைய காட்சிகளில் நடித்தாலும் முடிக்காமலே இறந்து விட்டார்.

அதனால் தான் அவரின் காட்சிகளை முழுமையாக படக்குழு வைக்கவில்லையாம். வில்லனுக்கு இரக்கம் வந்தால் படத்தின் வசூல் அடிப்படும் என பாதியிலேயே காணாமல் போய் இருந்தாராம். மேலும் அவருக்கு டப்பிங்கும் வேறு ஒருவரை வைத்தே முடித்து இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. போக்கிரி ராஜாவே அவரின் திரை வாழ்க்கையின் கடைசி படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top