ஆண்டவரே ‘தக் லைஃப்ல’ இருந்த காஸ்டியூம்லயே வாங்க! நாளைக்கு தேவைப்படும் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்

Published on: November 10, 2023
kamal
---Advertisement---

BiggBoss Season 7:  நாளை உலகெங்கிலும் உள்ள பிக்பாஸ் ரசிகர்கள் கமலின் எபிசோடிற்காக பெருமளவு காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி வாரத்தில் பிரதீப் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பப் பட்டார். ஆனால் அது ரசிகர்கள் மத்தியில் ஏற்புடையதாக இல்லை.

அதற்கேற்ற வகையில் பிரதீப் போன பிறகு வீட்டிற்குள் நடந்த சில விஷயங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளர் பிரதீப். ஆனால் சமீபகாலமாக அவர் பேசிய இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அங்கு இருக்கும் பெண்களுக்கு முகம் சுழிக்க வைக்கும் அளவில் இருந்ததால் பிரதீப் மீது புகார் கொடுத்து அனுப்பினார்கள்.

இதையும் படிங்க: ஏற்கனவே நேரம் சரியில்லை.. இதுல இது வேறையா.. அறிவிக்கப்பட்ட இளையராஜா பியோபிக்.. ஹீரோ இவர்தானா..?

ஆனால் அதே பெண்கள்தான் காதுகொடுத்து கேட்க முடியாத அளவுக்கு 18+ கமெண்ட்களை பேசி வருகின்றனர். இதனை எதிர்த்துதான் கடந்த ஒரு வாரமாக அர்ச்சனாவும் விசித்ராவும் அவர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். ஆனால் கமல் இந்த விஷயத்தை கொஞ்சம் தீர விசாரித்திருக்கலாம் என்றே ரசிகர்களின் பெருவாரியான கருத்தாகவே இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் கமல் ஆரம்பகாலத்தில் எப்படியெல்லாம் இருந்தார் என்பதற்கான வீடியோவையும் இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கமலை வச்சு செய்து வந்தனர்.  பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது தவறு என்றும்  ஒரு வார்னிங் கொடுத்திருக்கலாம் என்றும் அந்த பெண்களுக்கு அவர் ஒத்து ஓதுகிறார் என்றும் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: கடைசியா ராகவா லாரன்ஸ் முகத்துல சந்தோஷம்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் இதோ!..

உண்மையிலேயே யார் மீது தவறு இருக்கிறது என வீட்டில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போதே தெரிகிறது. பிரதீப் அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசியிருக்கலாம். தவறுதான். ஆனால் நிக்‌ஷன் ஃபிசிக்கலாகவே எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். பாடி ஷேமிங் செய்து வருகிறார். இதையெல்லாம சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறது? ஆனால் ரசிகர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?

அதனால் நாளை எபிசோடில் கமல் வந்து என்ன சொல்லப் போகிறார்? என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இந்த வாரம் எவிக்‌ஷன் கமலாகக் கூட இருக்கலாம் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். அதனால் தான் சமீபத்தில் தக் லைஃப் டிரெய்லரில் கமல் முக்காடு போட்டு அறிமுகத்தை கொடுத்திருப்பார். நாளை வரும் போது அந்த  முக்காடு துண்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாருங்கள் கமல் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.