விஜய், அஜித்தெல்லாம் ஓரமா போ!. புஷ்பா 2-வுக்கு அல்லு அர்ஜூன் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?..
Pushpa 2: இப்போதெல்லாம் கன்னட மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களும் கூட பல நூறு கோடிகளை வசூலிக்கும் படி மார்க்கெட் மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல், அடுத்து அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படமும் அனைத்து மொழிகளில் வசூலில் சக்கை போடு போட்டது. இதைத்தொடர்ந்து பிரபாஸ், ராம் சரண், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு என தெலுங்கின் முக்கிய நடிகர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் பேன் இண்டியா படமாகவே உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: தாக்கியவர் மீது புகார் கொடுக்காத வனிதா..! என்ன பிலிம் காட்றீங்களா? பயில்வான் ரங்கநாதன் பகீர் கேள்விகள்..!
அப்படி அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம்தான் புஷ்பா. 2021ம் வருடம் வெளிவந்த இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என்ப 3 மொழிகளிலும் வெளியாகி பல நூறு கோடிகளை வசூல் செய்தது. செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ராஷ்மிகா, பஹத் பாசில், சுனில், அஜய் கோஷ், ரா ராமேஷ் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.400 கோடி என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! இந்த வலி யாருக்கும் வரக் கூடாது – இயக்குனரால் நடுத்தெருவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ்
பொதுவாக நடிகர்கள் சம்பளம் வாங்கி கொள்வார்கள். சில நடிகர்கள் சம்பளம் மற்றும் சில ஏரியா வினியோக உரிமையை வாங்கி கொள்வார்கள். ஆனால், அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா 2 படத்தில் கிடைக்கும் மொத்த லாபத்தில் 33 சதவீதத்தை சம்பளமாக கொடுக்க போகிறார்களாம்.
இந்திய சினிமாவில் அமீர்கான் மட்டுமே இப்படி சம்பளமாக வாங்காமல் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் வாங்குவார். இப்போது 2வது நடிகராக அல்லு அர்ஜூன் உயர்ந்துள்ளார். ரஜினி, விஜய் ஆகியோர் சம்பளம் மற்றும் சில ஏரியா வினியோக உரிமையை வாங்கி வருகிறார்கள். அஜித் சம்பளம் மட்டுமே வாங்கி கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவறாக நடந்து கொண்ட நடிகரை பெயரை சொல்லாமல் இருக்க காரணம் தெரியுமா? விசித்ரா விட்டதை போட்டுடைத்த ஷகீலா..!